எனக்காக 8

379 14 7
                                    

அதெப்படி aunty நீங்க வைக்கிற சர்க்கரை பொங்கல் மட்டும் இவ்வளவு ருசியா இருக்கு? என்று கேட்டுக்கொண்டே தன் தட்டிலிருந்த  சர்க்கரை பொங்கலை சப்புக்கொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள் மீரா.

அதுவா எங்கம்மா அதுல அன்பு, பாசம், நேசம்னு எல்லா.....த்தயும் கொட்டி செய்வாங்க , அதான் என்று பானு தன் தாயை கிண்டல் செய்ய...

கிண்டல் பண்ணாதீங்க அக்கா... உங்களுக்கு அப்படி செய்ய வர்லைன்னு பொறாமை.

யாரு எனக்கா? நான் பொங்கல் செஞ்சா என்ற(என்னோட) வீட்டுக்காரர் எல்லாத்தையும் அவரே சாப்பிட்டிருவாராக்கும்... அவ்வளவு ருசியா வைப்பேன்..

அடடே , நீங்க சொன்ன எப்படி, மாமா வரட்டும் நானே அவர்ட்ட கேட்டுக்கிறேன் ...

ம்ம்..கேட்டுக்கோ கேட்டுக்கோ...

சரி சரி கேட்கறது இருக்கட்டும் மொதல்ல சாப்பிடுங்க என்று இன்னும் கொஞ்சம் பொங்கலை மீராவின் தட்டில் வைத்தார் லலிதா.

போதும் aunty என்று மீராவின் வாய் சொல்லியதே தவிர மனமும் வயிறும் இன்னும் கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்று சொன்னதை பிறர் கேட்க வாய்ப்பில்லாமல் போனது.

லலிதா எப்பொழுதுமே ஒற்றைபிள்ளையாய் இருக்கிறாள் என்றுவிட்டு அவர்கள் வீட்டில் ஏதேனும் ஸ்பெஷலாக செய்தால் மீராவிற்கும் சேர்த்தே செய்துவிடுவார்... முதலில் இவர்கள் வீட்டில் சாப்பிட சங்கடப்பட்ட மீராவும் , லலிதா மற்றும் ரகுராமின் ' நீயும் எங்களுக்கு பானு மாதிரி தான் ' என்ற கூற்றில் கூச்சத்தை விட்டுவிட்டாள்.

சாப்பிட்டு எழுந்த மீராவின் வயிறு இன்னும் கொஞ்சம் கேள் மீரா என்க.... பேசாமல் இரு, வேணும்ன்னா நானே செஞ்சு தரேன் என்று இவள் கூறிய உடன் .... தாயே எனக்கு நீ கேக்கலைனாலும் பரவாயில்லை , அன்னிக்கு சர்க்கரை பொங்கல் செய்யரேன்னு அடிப்பிடிச்ச ஒரு கசப்பு பொங்கல் செஞ்சு அதையும் வேஸ்ட் பண்ணகூடாதுன்னு எல்லாத்தையும் என்கிட்ட தள்ளுனியே , அந்த மாதிரி எதுவும் பண்ணிடாத , நீ தினமும் கொடுக்கற அந்த காஞ்சு போன ரொட்டித்துண்டே எனக்கு போதும் என்று கதற

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now