அத்தியாயம் 40

268 6 9
                                    

பாட்டி சமைத்துக் கொண்டிருக்க சித்ரா அவருக்கு உதவிக் கொண்டிருந்தார். பசியில் சமையல் அறையில் சுற்றிக் கொண்டிருந்த யுவதிகளுக்கு ,சத்துமாவு கஞ்சியை பாட்டி கொடுத்து விட , சமையல் கட்டிலேயே  உட்கார்ந்து வம்பளந்து கொண்டிருந்தனர்.

கௌசிக் கின் BMW போர்ட்டிகோவில் வந்து நின்ற சத்தத்தில் மூவரும் வேகமாக ஹாலுக்கு ஓடினர்...

வாசல் வரை சென்று அகிலன் கௌஷிக்கை வரவேற்றான்.

ஹாய் அண்ணா... என்றவாறு அணைத்துக் கொள்ள , கௌசிக் கும் அவனை அணைத்துக் கொண்டான்...

Miss this brotherly hug அண்ணா... என்று சிணுங்கியவனிடம் தன்னின் அளவான  டிரேட் மார்க் புன்னகையை  அளித்தபடி தன் தம்பியை பார்த்தான்.

சாகும் தருவாயில் அகிலனின் தந்தை சிவராமன் "எல்லாரையும் உன்னை நம்பி தான் தைரியமாக விட்டுட்டு போறேன் டா கௌசிக்" என்று சொன்னது இன்றும் நினைவலைகளில் நிழலாடியது.

பாட்டி, அகிலன், தான்வி. என மூவரிடமும் உரிமையோடும்,பாசத்தோடும் உறவாடவில்லை என்றாலும், மூவரின் ஒவ்வொரு செயல்களையும்  கவனித்து, தேவையானவற்றை அவர்கள் கேளாமல் செய்து கொடுத்து, ஒரு சிறு தீங்கும் அவர்களை நெருங்காதவாரு பாதுகாத்தும் வருகிறான்.

தன் கண்முன் சிறுவனாய் சென்று இன்று ஆண் மகனாய் திரும்பி வந்து நின்று கொண்டிருக்கும் தன் தம்பியை கண்டு பெருமையாய் இருந்தது.  தன் கடமைகள் முடிந்தது... இனி எல்லா பொறுப்புகளையும் இவன் ஏற்றுக் கொள்வான் என்ற நிம்மதி மனதில் பிறந்தது.

ஆனால் .......... மீரா????

வீட்டின் உள் நுழைந்தவுடன்
ஹாய் அண்ணா! என்று  அணைப்புடன் வரவேற்ற தான்விக்கும், வாங்க மாமா! என்று குஷியுடன் வரவேற்ற சிவா விர்க்கும் ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்தவன் கண்கள் , மூன்றாவதாக மலர்ந்த முகத்துடன் நின்றிருந்த அவளிடம் ஒரு கணம் தங்கி மீண்டது.

இந்த கண நேரத்திற்கு தானே இவன்  இங்கே வந்தது . மீராவை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை இத்தனை நாட்கள் கஷ்ட்டப்பட்டு அடக்கி வைத்துக் கொண்டிருந்தான்.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now