அத்தியாயம் 21

250 9 2
                                    

வண்டியில் சென்று கொண்டிருந்தவன் தனது அலைபேசி சிணுங்க வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு அழைப்பது யார் என்று பார்த்தவுடன் முகம் கருத்தது கௌசிக்கிற்கு.

ஏனோ இனம் தெரியா சங்கடம் மனதில் தோன்ற அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான்..

ஹலோ...

கௌசிக்... என்று அம்பிகா பாட்டியின் குரல் காதில் விழுந்தது..

சொல்லுங்க...

நல்லா இருக்கியா?

ம்ம்..

வெளிய இருக்கியா?

ஆமா, ஆபீஸ் போய்ட்டு இருக்கேன்...

அப்போ நான் அப்பறம் பேசட்டுமா?

சரி என்று சொல்ல வாய் வரை வந்தாலும் ,, இல்லை பரவாயில்லை..சொல்லுங்க! என்றே வார்த்தை வெளிவந்தது..

அது ஒன்னும் இல்லை பா... அகிலன் இன்னும் கொஞ்ச நாள்ல இந்தியா வந்திருவான்... அதுகுள்ள பொண்ணு வீட்ல பேசிட்டா , கல்யாணத்தை சீக்கிரம் வைத்துவிடலாம்...

கல்யாணம் என்று கேட்டவுடன் அவன் இதயத்தில் ஒரு சிறு படபடப்பு ஏற்பட ,வார்த்தைகள் வெளிப்பட மறுத்தன..

கௌசிக்... கேட்குதா?

ம்ம்... நா... நான் ..வந்து... என்ன சொல்வது என்று புரியாமல் திணற...

அந்த பொண்ணுகிட்ட பேசினியா பா?
பொண்ணு நல்ல பொண்ணா? அந்த பொண்ணையே அகிலனுக்கு பேசிடலாமா? இல்லை வேற பொண்ணு பார்க்கலாமா?

அது .. இங்க ரோட்ல இரைச்சலாக இருக்கு... நான் அப்பறம் உங்களை கூப்பிடறேன்...

சரி பா.. என்று அவர் வைத்து விட... இங்கு கௌசிக்கோ அவர்களுடன் பேசினால்,  எந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று தள்ளி போட்டானோ அதே கேள்வி வந்தவுடன் பதில் சொல்ல முடியாது தவிக்கிறான்.

என்ன பாட்டி, அண்ணா என்ன சொன்னாங்க? என்று ஆர்வமாய் தான்வியின் கேள்விக்கு அம்பிகா புன்னகைத்தார்

சொல்லு பாட்டி... ஏன் சிரிக்கிற?

அவன் அப்பறம் கூப்பிடறேன்னு சொல்லி வைத்துவிட்டான்.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now