அத்தியாயம் 49

226 10 6
                                    

   தனது அறையில் போடப்பட்டிருந்த அந்த பெரிய ஈஸி சாரில் அமர்ந்தபடி ஏதோ ஒரு ஆங்கில நாவலை படித்துக் கொண்டிருந்தான் கௌஷிக்.

கண்கள் புத்தகத்தில் மேய்ந்தாலும் , மனதில் என்னவோ வேறு நினைவுகள் வாட்டி எடுத்தது... 

இதற்கு மேல் முடியாது என்ற பெருமூச்சோடு புத்தகத்தை மார்பில் கவிழ்த்தியவன் , நிமிர்ந்து கட்டிலின் தலைமாட்டு சுவற்றில் மாட்டி இருந்த அந்த ஆளுயர புகைப்படத்தை பார்த்தான்.

ஒரு முறை இவனும் , மீராவும் கோயம்பத்தூரில் இருக்கும் போது, விடுமுறை நாளில்  பக்கத்தில் இருந்த ஒரு முருகன் கோவிலுக்கு சென்றிருந்தனர். அங்கே ஒரு மயில் சிலை இருக்க ,அதன் கழுத்தை கட்டிப்பிடித்தவாறு புன்னகைத்துக் கொண்டிருத்த மீராவின் புகைப்படம் இது.

அந்த முகத்தில் தான் என்ன ஒரு ஆனந்தம் , எதோ உலகத்தையே  வென்றுவிட்ட மாதிரி... ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன விஷயத்திற்குகூட அவளின் இந்த உற்சாகம் அவனை அதிசயக்க வைக்கும்.

காலை எழுந்தவுடன் , மனம் சோர்வுறும் போது எல்லாம்,  இவளின் இந்த புன்னகையை பார்க்கும்போது,இவனுக்குமே ஒரு புத்துணர்ச்சி வரும்...ஆனால் இன்றோ வேதனையே மிஞ்சியது... 

இன்று எனது சிறு பார்வைக்காக , ஒரு வார்த்தைக்காக அவளின் வதனத்தில் தோன்றிய எதிர்ப்பார்ப்பை கண்டு கொண்டாலும் , அதை நிறைவேற்ற முடியாமல் , அவளது வாடிய முகத்தைக் கண்டு மனம் நொந்தது , இன்னும் அவனுக்கு வலித்தது.

ஏண்டி உன்னையும் வருத்தி , என்னையும் கொல்ற .... இப்போ கூட எங்கப்பாக்கு கொடுத்த வாக்கை கூட மீற தோணுது... எல்லாருக்கு முன்னாடியும் நின்னு மீரா என்னுடையவள், எனக்காக பிறந்தவள் ன்னு கத்தனும்ன்னு இருக்கு.... 

ஆனா அத நான் பண்ணினாலும், ஒரு வேலை கல்யாணமே ஆகிட்டாலும், ஒரு நாள் அல்லது ஒரு நிமிஷம்" ச்ச கூட்டுக் குடும்பமா இருக்க ஆசைப்பட்டோமே ... இப்படி ஒரு அனாதையை கல்யாணம் பண்ணிட்டோமேன்னு" நீ நினைச்சு கஷ்டப்பட்டா... நம்ம ரெண்டு பேர் வாழ்கையும் நரகம் ஆகிடுமே மீரா...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now