அத்தியாயம் 25

211 8 0
                                    

மாலை வீடு வந்த கௌசிக் , மீரா இன்னும் வராமல் இருப்பதை கண்டு திடுக்கிட்டான்.. எப்பொழுதுமே அவள்  நேரமாக வந்துவிடுவாள் ...இன்று இவனே தாமதமாக தான் வந்திருந்தான்...இருந்தும் அவள் வீடு வராமல் இருக்க..

அவளை அழைபேசியில் அழைத்தான்.

ஹலோ கௌசி...

பின்னால் வண்டிகளின் இரைச்சல்  கேட்க...

மீரா.. வந்துட்டு இருக்கியா?

இல்ல... நான் வெளிய வந்திருக்கேன்..

எங்க?

அது.. எ...ன்..என்  ப்...ரெண்ட்... பர்த்டேக்கு வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கா...ங்க... ஆபீஸ் பக்கம்... தான்...

ஓஹ்.. ஓகே... பார்த்து வா.. லேட் ஆகும் என்றால் சொல்லு நான் வரேன்...  என்றபடி அழைப்பை துண்டித்தான்..

மீரா எதையோ மறைக்கின்றாள் என்பதை அவளது தடுமாற்றம் உணர்த்துகிறது... ஆனால் ஏன்? என்ற கேள்வி கௌசிக்கின் மனதை குடைந்தது..

சரி ,சொல்வதும் சொல்லாததும் அவளது விருப்பம். நம்ம வேலையை பார்ப்போம் என்றபடி லேப்டாப்பில் மூழ்கினான்.
சிறிது நேரம் கழிந்திருக்கும்,
மீரா கூப்பிடுவது போல தோன்ற, வெளியே வந்து பார்த்தவன், அவளது வீடு இன்னும் பூட்டிதான் இருப்பதை கண்டு குழம்பினான்.
அப்படியே மனதில் ஏதோ ஒருவிதமான பட படப்பு தோன்றியது.
நேரம் ஆக ஆக படபடப்பு கூடியதே தவிர குறையவில்லை...

இதற்குமேல் தாங்காது அவளிடம் பேசி விடவேண்டும் என்று அவளை அழைத்தான்.

அழைப்பு போய் கொண்டே இருந்ததே அன்றி எடுக்கவில்லை... மறுபடியும் அழைக்க கடைசி நொடியில் அழைப்பு எடுக்கப் பட்டது..

மீரா.....

ஏதோ ஒரு வெஸ்டர்ன் பாட்டின் ஒலி இரைச்சலாக இருக்க , அதை தாண்டி மெலிதாக
பிளீஸ் என்ன விட்டுடுங்க... ஆ...  என்ற மீராவின் கதறலும்
நில்லுடி... புடி டா...
ஓடாத... ஏய்...

என்ற பிறரின் குரல்கலும் மெலிதாய் கேட்டது இவனுக்கு பதிலழிக்கும் விதமாய்...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now