எனக்காக 5

499 17 1
                                    

சிவராமன் இருக்கும் பொழுது குடும்பத்தோடு வருடம் ஒருமுறை தமிழ்நாட்டிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ,அவர் இறந்த பின்னர் அங்கு செல்லவே இல்லை.
தனது மகள்களும் கூப்பிட்டு கொண்டே இருக்க , அங்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் பாட்டியின் மனதில் இருந்து கொண்டே இருந்தது ..

சமீபத்தில் இருந்து அங்கு தன் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்று தோன்றுக் கொண்டே  இருக்கிறது. இத்தனை வருடங்கள் அவரை காணாமல் இருந்ததுனால் தான் கௌசிகிற்கு திருமணத்தடை ஏற்படுகிறது என்று மனதில் தோன்றியது . கௌசிகிற்கும்  இவர்களுக்கும் ஒரே குலதெய்வம் தான்.

அன்று தான்வியும் iv  என்று டெல்லி கிளம்பிவிட இவர் தமிழ் நாட்டிற்கு கிளம்பினார்.

அங்கு தன் மகள்கள் வீட்டிலிருந்து தன் இளைய மருமகனோடு கோவில்க்கு  கிளம்பினார் .

அன்று
வெள்ளிக்கிழமையும்    வேறு விழாவும் இல்லாததால் கோவில் அந்த காலை நேரத்தில் சில பக்தர்களுடன் தான்  இருந்தது. 

அங்கு கர்பகிரஹத்தில் வீற்றிருந்த உலக நாயகி அருள்மிகு வீரமாத்தி அம்மனை பார்த்தவுடன் அவளின் அழகில் மயங்கி நின்றார்.

சிவப்பு சரிகை சேலையில் முகத்தில் கருணை பொங்க உனக்காக  நான் இருக்கிறேன் என்று சொல்வது  போல இருந்த அவளின் முகத்தை பார்த்தவுடன் மனதில் இருந்த பாரங்கள் யாவும் நீங்கியது போல இருந்தது.

அம்மா உனக்கே தெரியும் நான் எதற்கு வந்திருக்கேன்னு , கௌசிக் தாய் தந்தை இல்லாம தனியா இருக்கான் மா, அவனுக்குனு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும். எத்தனையோ கஷ்டங்களை அந்த சின்ன பையன் பார்த்துட்டான் மா,
நான் சாகரதுகுள்ள அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சி கொடுக்கணும் மா.

என் பேரன் பேத்தி பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை, அவர்களை கௌசிக் பார்த்துப்பான்.
ஆனா அவனை கவனிக்க யாரு இருக்கா மா?

என் கடைசி ஆசைனு கூட இத வெச்சுக்க,  அவனுக்கென்று  பிறந்தவளை சீக்கிரமா கண்ணுல காமிச்சு என்னோட கௌசிக்கின்  மனச மாத்தி அவனை கல்யாணத்திற்கு சம்மதிக்க வை மா என்றவர் கண் மூடி,  அழகிய பதுமையாய் வீற்றிருந்த அம்மனை வணங்கினார்.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now