அத்தியாயம் 28

257 9 0
                                    

A Long Update...

Mature content ahead 🤫

Just kidding 😂😉

மாலை நேரம் கழித்தே வீட்டிற்க்கு வந்தவன் ஒரு குளியல் போட்டுவிட்டு அர்ஜூனுடன் அன்றைய நிகழ்வுகளை ஜூம் மில் பேசிக் கொண்டிருந்தான் கௌசிக்...

டிங் டாங்...
அழைப்பு மணி கூவ..

"ஜஸ்ட் அ மொமென்ட் அர்ஜூன்" என்றவாறு எழுந்து வந்து கதவை திறந்தான்.

வீட்டுக்கு போட்டுக் கொள்ளும் சாயம் போன வெள்ளையில் ஊதா பூ போட்ட சாதாரண சுடிதாரில் ,
காலையில் குளித்த தலையை எப்போதும் போல இன்றும் மாலை வந்தே காயவைக்க வேண்டி, பின்னலை  அவிழ்த்து காதோரங்களின் கூந்தலை  இழுத்து ஒரு கிளிப் பை மட்டும்  குத்தியிருக்க, அலை அலையாய் காற்றில் பறந்த  இடைவரையான கூந்தலோடு, துப்பட்டாவின் நுனியை ஒரு பதட்டத்தோடு விரல்களால் சுற்றிக்கொண்டு இருந்தவள், கௌசிக் கதவை திறந்தவுடன் அவனை நோக்கினாள்.

கண்கள் சந்தித்த நொடியில் ,
இருவரின் உள்ளமும் தங்களது பிரிவின்  தவிப்பை
விழிகளால் மற்றவருக்கு பகிர்ந்து கொண்டிருந்தது.

நொடிகள் கரைய மேல் வீட்டில் யாரோ பேசிய சத்தத்தில் இருவரும் கலைந்தனர்.

ம்க்ம்... என்று தொண்டையை செருமி முந்தைய நொடிகளின் நெகிழ்வை விழுங்கியவன் , தன்னை காணாது வேகமாய் தலையை குனிந்துகொண்ட மீராவை நோக்கியவாறு..

"உள்ள வா மீரா"..  என்ற அழைப்புடன் கதவிடம் இருந்து நகர்ந்து கொண்டான்..

உள்ளே வந்தவள் , தயங்கியபடி நிற்க

கௌசிக் தன் லேப்டாப்பில் தன்னோடு தொடர்பில் இருந்த அர்ஜுனிடம்
"I  will call you later.." என்று வைத்து விட்டு இவளை நோக்கி திரும்பினான்.

சொல்லு மீரா..

அ... அது... வந்து... கௌசிக்...
வார்த்தைகள் வந்தாலும் அவளது தலை நிமிராமல் தனது கையில் படாத பாடு பட்டு கொண்டிருந்த  துப்பட்டாவையே  உறுத்துக்கொண்டிருந்தாள்.

நா...நான் வந்து ... உன்...உங்க கிட்ட ..நான் கொஞ்சம் பேசணும் கௌசிக்..

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now