அத்தியாயம் 27

233 7 0
                                    

புல்லாங்குழல் இசை தாலாட்டை போல வருட , கண்களோ "விழிக்கதே , இன்னும் சிறிது நேரம் இப்படியே இரு மீரா " என்று கெஞ்சியது .

சிரமப்பட்டு கண்களை விரித்த போது அங்கு "டை" கட்டிக்கொண்டு இருந்த கௌசிக் பார்வையில் விழுந்தான்..

இருக்கும் இடம் உரைக்க, பதறியபடி கட்டிலில் இருந்து எழுந்து நின்றாள் மீரா.

அவளது அசைவில் திரும்பி பார்த்தவன் அவள் முழித்து விட்டதை கண்டும் ஏதும் பேசாமல் திரும்பி வேலையை தொடர்ந்தான்.

இப்பொழுது என்ன பண்ணுவது? அவனிடம் பேசலாமா? இன்னும் கோவமாக தான் இருக்கிறானோ?... கடவுளே எனக்கு தைரியம் கொடுப்பா!! என்ற மன்றாடலோடு மீரா கையை பிசைந்து கொண்டே நிற்க ,

டையை கட்டி முடித்து விட்டு , தலையை கோதியவாரு ஹால்லை நோக்கி கௌஷிக், செல்ல இவளும் அதை கண்டு அவன் பின்னால் ஒரு தயக்கத்தோடு தொடர்ந்தாள்.

அங்கே டைனிங் டேபிளில் இருந்த ஹாட்பாக்ஸை சுட்டிக் காட்டி,

ப்ரேக் பாஸ்ட் வெச்சிருக்கேன், அண்ட் லஞ்ச் கிட்சனில் வெச்சிருக்கேன்... மதியம் ஓவனில வைச்சு சூடு பண்ணி சாப்பிட்டுக்கோ.. என்று அவள் முகம் பார்த்து கூட சொல்லாது, ஷூ வை மாட்டிக்கொண்டே சொன்னவன் அவனது பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்...

அவன் பாரா முகம் மீரா விர்க்கு அழுகை வரவழைக்க , கூடவே வயிறும் பசியில் சத்தம் இட்டது... தேம்பிக்கொண்டே போய் ஹாட்பாக்சை திறந்து பார்த்தால் உள்ளே அவளுக்கு பிடித்த சப்பாத்தியும் , சன்னாவும் இருக்க
கண்களை துடைத்துக் கொண்டே,

"கொஞ்சம் பொறு நான் போய் பல் விலக்கிட்டு வரேன்" என்று அதை பார்த்து சப்புக் கொட்டிக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.
.
.
.

மீட்டிங்கை முடித்து விட்டு தனது இடத்தில் வந்து அமர்ந்த கௌசிக்கிர்க்கு காலையில் தொலைபேசியில் அழைத்த அம்பிகா பாட்டியின்
"நாங்க இன்னும் ஒரு வாரத்துல அங்க வரோம் பா... அகிலன் வருவதற்குள் மீராவை பேசி முடிச்சிரலாம் ... சரி தானே..?"குரலே காதில் திரும்ப திரும்ப ஒலித்தது.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now