எனக்காக 2

723 20 1
                                    

பாட்டி என்ன சொல்றீங்க ? என்று அதிர்ச்சியாய் வினாவினாள் தான்வி

ஆமா டா ... என்ற அம்பிகா பாட்டி அன்றைய நிகழ்வுகளை கூற ஆரம்பித்தார் ...

நம்ம சொந்த ஊரு இந்த மும்பை இல்ல, கோயம்புத்தூர் பக்கத்துல சின்ன கிராமம் ... அது உனக்கும் தெரியும் ,  உங்க தாத்தாக்கு (விஸ்வம்) சொந்தமா நாலு ஏக்கரா வயல் நிலம் இருந்துச்சு...நானும் அவரும் அதுல வர்ற வருமானத்த வைச்சு தான் உங்கப்பன் சிவராமனையும் உங்க அத்தைக இரண்டு பேர்த்தையும் வளர்த்தோம் ...

அங்க நம்ம ஊருலேயே தான் இருந்தாரு உங்க தாத்தாவோட பெரியப்ப பையன் வடிவேலு ...

அவுங்களுக்கும் விவசாயம் தான்...

ஒரே மகன் தான் அவங்களுக்கு,பேரு மாதவன் நம்ம கௌஷிக்கோட அப்பா...

சிவராமனும் மாதவனும் ஒரே வகுப்புல தான் படிச்சுட்டு இருந்தான்க...ஆனா நெருங்கிய நண்பனுக எல்லாம் இல்ல...

மாதவன் அம்மா வசந்தி அப்பப்ப அவனையும் கூட்டிட்டு வீட்டுக்கு வருவா நானும் சித்த நேரம் போய் அவுங்க வீட்டுல உட்கார்ந்து பேசிட்டு வருவேன்...

அப்ப மாதவனுக்கு பத்து வயசு இருக்கும் அவங்கம்மா விஷக்காய்ச்சல்ல படுத்தவ ஒரேயடியா கண்ண மூடிட்டா...அடுத்த மூனு மாசத்துல அவங்க அப்பாக்கு இரண்டாம் கல்யாணம் ஆயுடுச்சு...

ஒரு ஆறேலு மாசம் போயிருக்கும்,ஒரு நாளு மதியம் நான் வயலுக்கு போய்ட்டு இருந்தேன்,காட்டுப் பாதை அவ்வளவா ஆள் நடமாட்டம் இருக்காது ...

போற வழில நம்ம காட்டுக்கு ஐம்பதடி இருக்கற இடத்துல  ஒரு அரசமர பிள்ளையார் கோயில் ஒன்னு இருக்கும்...அங்க பார்த்த மேடைல யாரோ சின்ன பையன் காலையெல்லாம் சுருக்கிட்டு படுத்துருந்தான் ...யாருட இதுனு பக்கத்துல போய் பார்த்த மாதவன் மாதிரி இருந்துச்சு...

என்னட ஸ்கூல்க்கு போக வேண்டிய பையன் இங்க படுத்து கிடக்கானே போய் எழுப்பரேன் உடம்பெல்லாம் அனலா கொதிக்குது... அப்பையே உங்க தாத்தாவுக்கு சத்தம்போட்டு வர சொல்லி இரண்டுபேரும் அவன ஆஸ்பிட்டல்ல கொண்டுபோய் சேர்த்தோம்...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now