அத்தியாயம் 18

244 13 7
                                    

உண்மையாவா? போலாமா? என்று கண்கள் விரித்து கொண்டு மீரா கேட்க...

Yes . எனக்கு ஷூ வாங்க வேண்டியது இருக்கு... அதான்...

Wow... வு வு என்று துப்பட்டாவை தலைக்கு மேல் தூக்கி சுத்த ஆரம்பித்தாள்..

நான் முதல் தடவை மால் எல்லாம் போக போறேன் கௌசிக்... I am so excited ... நான் போய் கிளம்பிரேன் என்று விட்டு ஓடினாள்...

என்ன பெண் இவள் , ஒரு சின்ன சின்ன விஷயத்திற்கு கூட எவ்வளவு சந்தோஷப்படுகிறாள் என்று அதிசயமாக பார்த்தான்.

அப்பா... எவ்ளோ அழகா இருக்கு !! என்று தலையை அண்ணாந்து பார்த்து அந்த 'மால்'லை ரசித்துகொண்டே வந்த அவளது நெஞ்சம் எஸ்கலேட்டரை பார்த்தவுடன் படபடக்க ஆரம்பித்தது..

ஒரு குழந்தை இந்த எஸ்கலேட்டரில் மாட்டிய சம்பவம் அவள் காலேஜ் படிக்கும் போது கேட்டது இன்று அடி நெஞ்சில் பயத்தை ஏற்படுத்தியது...

கௌசிக் ... நம்ம லிஃப்ட் ல போய்டலாமா ?

எஸ்கலேட்டர் தான் இருக்கே அப்பறம் என்ன?

அது... கௌசிக்... எனக்கு பயமா இருக்கு!

ஃபோர் வாட்?

இதுல போக...

அதை கேட்டவன் அவளை ஒரு விசித்திர ஜந்துவை போல பார்த்தான்...

பின்பு அவள் தான் கேட்டதை சொல்ல...
அது ஒரு விபத்து மீரா... அப்டின்னு பார்த்தா ஸ்கூட்டி, பஸ் னு எல்லாத்திலையும் விபத்து ஏற்படுதே அதுல எல்லாம் போகாம இருந்துப்பியா?..

அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனையே பாவமாக பார்த்தாள்..

இப்போ நம்ம இதுல தான் போறோம் ..

அவன் இதற்கு மேல் கண்டிப்பாக விடமாட்டான் என்பது புரிய ... வேக வேகமாக அவனது கையை கோர்த்துக் கொண்டாள்..

சரி இப்போ நான் one two three சொன்னவுடன் நீ என்னோடு சேர்ந்து அந்த ஸ்டெப்ஸ் ல கால் வைக்கணும்... புரிஞ்சுதா??

ஹ்ம்ம்... என்றவள் நடுக்கத்துடன் அவனது தோள்பட்டையோடு தன் கரத்தை கோர்த்துக் கொண்டாள்...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now