அத்தியாயம் 14

263 12 0
                                    

காலையில் கிளம்பி கீழே வந்தவனின் கண்களில் மீரா அபார்ட்மெண்ட்டை வெளியே செல்வது தெரிந்தது ...

காலையில் இருந்தே நேற்று இரவு நடந்தது ஒரு காட்சியாய் மனதில் ஓடியபடி இருந்தது... ஏனோ ஒரு இனம்புரியாத ஒரு உணர்வு அவள் மேல் தன்னகத்தே தோன்றுவது அவனுக்கே புரியாததாகியது..

சிறு வயதில் இருந்தே எல்லோரிடமும் மனதால் விலகி இருந்ததாலோ என்னவோ , இன்று இவளுடனான இந்த சின்ன நெருக்கமும் ஒரு வித மகிழ்வை அவனுக்கு அளித்தது.

எப்போதும் போல ராயல் என்பீல்டை எடுக்க முனைந்தவன் ஒரு நிமிடம் ஏன் நடந்து போகும் அவளையும் அழைத்து செல்ல கூடாது என்ற எண்ணம் தோன்ற என்பீல்டை விட்டு விட்டு தன் காரை எடுத்தான்... மீரா வரும் பட்சத்தில் இருவருக்குமே சங்கடம் இல்லாத பயணமாக அமையும் என்ற எண்ணத்தில்.

மீரா எப்பொழுதும் போல தன்னை திட்டிகொண்டே நடந்து கொண்டிருந்ததாள்...

அடியேய் மீரா நீ எல்லாம் உருப்பட வாய்ப்பே இல்லை .. அச்சோ மணி வேற அச்சே, பஸ் கிடைக்குமோ என்னவோ... எவ்வளவு கொழுப்பு இருந்த அலாரத்தை ஆஃப் பண்ணிவெச்சிட்டு தூங்குவ... போ போ அந்த மேனேஜர் கிட்ட நல்லாவாங்கு குரங்கே... உனக்கு அது தான் சரி... என்றெல்லாம் தனக்கு தானே அர்ச்சனை செய்து கொண்டவள் , கடவுளிடம் மனு போட ஆரம்பித்தாள்...

விநாயகா காப்பாத்து ப்பா!! இந்த ஒரு தடவை... பஸ் போனவுடனே கிடக்கனும்... இனி என்னைக்கும் அலாரத்தை ஆஃப் பண்ணமாட்டேன் ... பிளீஸ் பிளீஸ் , ஹெல்ப் மீ பா... என்று மன்றாடலுடன் நடந்து கொண்டிருந்ததாள்...

காரை ஒட்டிக்கொண்டு இருந்தவன் மீரா கண்களில் தட்டுப்பட அவளுக்கு சிறிது முன்னாள் காரை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி இறங்கினான்...

தனக்கு முன்னால் காரில் இருந்து இறங்கிய கௌஸிக்கை பார்த்தவுடன் மீராவின் நெஞ்சில் அவ்வளவு நேரம் இருந்த பதட்டம் சட்டென்று மாறி ஒரு நெகிழ்வு தோன்றியது...

கௌசிக்....

குட் மார்னிங் மீரா...

குட் மார்னிங்...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now