அத்தியாயம் 38

242 5 4
                                    

தனது அறையில் அமர்ந்து கீதையை படித்துக் கொண்டிருந்த பாட்டியை அங்கே வேலை செய்யும் சித்ரா வந்து அழைத்தார்.

பாட்டி...

சொல்லு சித்ரா..

கேசவன் அய்யா வந்திருக்காரு...

இதோ வர்றேன்... அவனுக்கு சுக்கு பால் கொண்டு வந்து கொடு... அது தான் அவனுக்கு பிடிக்கும் என்றவாறு அறையில் இருந்து வெளியே வந்தார்.

அங்கே ஹாலில் சோஃபா வில் அமர்ந்திருந்த கேசவன் அம்பிகா வை பார்த்தவுடன் எழுந்து நின்றார்.

வா கேசவா...

நல்லா இருக்கீங்களா அம்மா?

எனக்கு என்னப்பா நல்லா இருக்கேன்... நீ எப்படி இருக்க? மகேஷ்வரி எப்படி இருக்கா?

எல்லாரும் நல்லா இருக்கும் மா..

பேரன் என்ன சொல்றான்? பொண்ணும் மாப்பிள்ளையும் வீட்டுக்கு வந்தாங்களா?

போனவாரம் வந்தாங்க... பொடுசு நல்ல வாலு... இப்பையே அவ்வளவு குறும்பு பண்றான்...

ஹாஹா... இருக்கட்டும் இருக்கட்டும்... குறும்பு பண்ணா தான குழந்தை ...

சரி தான் மா... ஆமா எங்க அந்த பொண்ணுங்க?

எல்லாம் வெளிய சுத்த போய்டாங்க கேசவா... வீட்லயே எவ்ளோ நேரம் இருக்குங்க...

ம்ம்...

சரி பாலை குடி ஆறிட போகுது...

சரி மா... என்றவர் சுக்குப்பாலை  ரசித்துக் குடித்தார் .

ஆமா கௌசிக் வந்தானா ?

அந்த புள்ளைகளை கொண்டு வந்து விட்டுட்டு போனதோட சரி ...அப்பறம் வரலை..

ம்ம்... அவன் லண்டன் போறது நம்ம கூட டை அப் வெச்சுகிட்டாங்களே ஒரு foreign கம்பனி .. அங்க தான்..
அவனுங்க வந்தப்பயே கௌசிக் மேல ஒரு கண்ணா தான் இருந்தாங்க...
கோடிக் கணக்குல சம்பளம் தருவதா சொல்லிக் கூப்பிட்டு பார்த்தாங்க...கௌசிக் அப்போ மசியலை... இப்போ சரின்னு சொல்லிட்டான்.

என்ன கோடிக் கணக்குல சம்பளம்?  
என் புள்ள இருந்தப்போ ஒரு துணி மில்லும் , hotel ஒன்னோட இருந்தது... அவன் போன பின்பு கௌசிக் அதை கைல எடுத்தான்.இப்போ பாரு நம்ம துணி வெளிநாடு வரைக்கும் ஏற்றுமதி ஆகுது... நம்ம ஜவுளிக் கடை மும்பைல இருக்க மிக பெரிய சாம்ராஜ்ஜியம்... அது இல்லாம hotel தொழில் கூட நம்ம தான் நம்பர் ஒன்... அது மட்டுமா... அவனோட அப்பா செஞ்சிட்டு இருந்த இரும்பு தொழிற்சாலைய நம்மக்காக ஆரம்பிச்சான். அதும் இப்போ வெளிநாடு வரைக்கும் நம்ம பேர சொல்லுது...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now