அத்தியாயம் 35

240 7 0
                                    

மும்பை...

ஆபீஸில் தனது அறையில் அமர்ந்து ஒரு important பைலை பார்த்துக்கொண்டிருந்த கௌசிக்கை அவனது மொபைல் போன் அழைத்தது.

எடுத்துப் பார்த்தவன் புருவம் சுருங்க... அட்டென்ட் பண்ணி காதில் வைய்த்தான்

ஹலோ கௌசி, நான் அம்பிகா பா

சொல்லுங்க...

அது ஒன்னும் இல்ல கண்ணா... இன்னிக்கு மீரா இங்க வர்றா..

மீரா வா?? மும்பைக்கா?? எதுக்கு??
கேள்விகள் தொடர்ந்து வர

அடுத்த முனையில் அம்பிகா பாட்டி ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தது இவனுக்கு இங்கு தெரிய வாய்ப்பில்லை தானே.

உன்னிடம் மீரா சொல்லலையா? உன் ப்ரெண்ட் உன்னிடம் சொல்லிருப்பாள் என்று நான் நினச்சுட்டேன்...

இல்ல... சொல்லலை...

அப்போ surprise ஆக இருக்கணும்னு நினச்சிருப்பா..

ம்ம்....

அது ஒன்னும் இல்லை பா... அகி க்கோ மீரா க்கோ ஒருத்தரை ஒருத்தர் தெரியாது... அதான் கல்யானத்துக்கு  முன்னாடி பேசி பழகணும்ன்னு அகி ஆசைப் பாட்டான்... அதுக்கு தான் வர்றா.

Oh... என்று ஒரு வார்த்தையில் பதில் அளித்தாலும் , கோவத்தில் அங்கிருந்த பேப்பர் வெய்ட் அவன் கைகளால் அழுத்தப் பட்டுக் கொண்டிருந்தது..

இன்னிக்கு தான்வி போய் கூட்டிட்டு வர்றதா தான் இருந்துச்சு... அதுக்குள்ள அவளுக்கு ஏதோ காலேஜ் ல மீட்டிங்காமா... அவனால போக முடியாது... எனக்கு மூட்டு வலி, வயசாகிடுச்சு ல... போக முடியாது... டிரைவர்  ஆ அனுப்பலாம் தான்... என்ன இருந்தாலும் வீட்டுக்கு வர போற மருமக , முதல் முறையா வீட்டுக்கு வர , யாரும் கூப்பிட போகலைனா நல்ல இருக்காது...  அதான் நம்ம வீட்டு சார்பா நீ போய் கூட்டிட்டு வரயாப்பா??

எந்த பதிலும் கௌசிக் கிடம் இருந்து இல்லாமல் போக

சரி வேலை இருந்தா விடு பா , இனி என்ன பண்ண முடியும் ... நான் டிரைவர் கிட்டயே கூட்டிட்டு வர சொல்லிக்கறேன் என்று சோகம் போல முடித்தார் அம்பிகா..

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now