அத்தியாயம் 41

246 5 3
                                    

மதியம் ...
மும்பையை தனது பார்வையால் எரித்துக் கொண்டிருந்தான் கதிரவன். அதே நேரத்தில் , தனது அலுவலக குளு குளு அறையில் ரோலிங் சேரில் சாய்ந்து அமர்ந்திருந்த கௌசிக் கின் கண்கள் , டேபிள் மேல் முழித்து இருந்த சிஸ்டமில் இருந்த போதும் , மூளை காலை நடந்ததை அசை போட்ட படி இருந்தது.

அம்பிகா பாட்டி வீட்டில், தான் சாப்பிட செல்லும் போது எல்லாம் தனக்கு பிடித்த சமையலே இருக்கும்.. தான் சிறு வயதில் விரும்பி உண்ணும் உணவுகள் அனைத்தும் அந்த dinning table லில் நிறைந்து காணப்படும்.

அது மனதுக்கும் வயிற்றுக்கும் நிறைவாக இருந்தாலும், எப்பொழுதும் போல அதில் ஈடுபாடு இல்லாதவனாக காட்டிக் கொள்வான். இன்று காலையும் அதுவே தான் நடந்தது.

ஆனால் உணவுகளில் ஈடுபாடு இல்லாதவனாக இருக்க அடக்கப்பட்டிருந்த மனது ,மீரா விடம் பார்வை செல்வதை தடுக்க முடியாமல் தவித்தது .
ஆனால் யாரும் பார்க்காதவாரு அவளை பார்ப்பதில் வெற்றிபெற்றது.

தனக்கு எதிரே சாப்பிட அமர்ந்திருந்தவள், சாப்பிட்டாள் என்று இல்லை... விரல்கள் தட்டில் கோலம் போட முகம் யோசனையில் ஆழ்ந்திருந்தது.

என்ன யோசனை சாப்பிடும் போது இவளுக்கு? என்ற எண்ணத்தில் அவளை கூப்பிட முன்றபோது, அம்பிகா பாட்டி அந்த வேலையை செய்தார் .

மீரா... என்ன தட்டுல வெச்சது அப்படியே இருக்கு ... பிடிக்கலையா?

அச்சோ சோ ... அப்படி எல்லாம் இல்லை பாட்டி... எல்லாமே சூப்பர் ஆக இருக்கு...

அப்பறம் என்ன சாப்பிடு... இந்தா இன்னும் கொஞ்சம் பொங்கல் வெச்சுக்க...

வேண்டாம் பாட்டி ... இதுவே அதிகம்...

வயசு புள்ள இவளோ தான் சாப்பிடறதா? நானும் வந்ததுல இருந்து பார்த்திட்டு தான் இருக்கேன்.. நீ சாப்பிடறதே சரி இல்லை... இந்த வயசுல நல்ல சாப்பிடணும்... அப்போ தான் பின்னாடி குழந்தை குட்டி எல்லாம் பெத்து வளர்த்த உடம்புல தெம்பிருக்கும்... என்ன புரிஞ்சுதா...
உங்களுக்கும் தான் டி வாயடி கழுதைகளா...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now