எனக்காக 10

320 12 1
                                    

மாமா பக்கத்துல இல்லாததால உங்களுக்கு பயம் விட்டு போச்சு அக்கா, எப்போ பாரு ஆன்ட்டி கூட சண்டை போட்டுட்டே இருக்கீங்க ,பொறுங்க மாமா வந்துன்ன அவர்கிட்ட சொல்லி கொடுக்கிறேன்😾 என்று ஆபீஸ் விட்டு வந்தவள் பானு மற்றும் லலிதாவின் வாக்குவாதம் காதில் விழ பானுவிடம் மேற்கூறியது போல வம்பிழுத்தாள் மீரா.

அய்யோ பயந்துடேன் பா😧...
போட்டுக்கொடுக்குற மூஞ்சிய பாரு, அவரு இங்க வந்தாலே அவர் கிளம்பர வர வீட்டு பக்கம் எட்டிபார்க்காத ஆளு நீ, நீ எல்லாம் பேசரதுக்கே லாயிக்கிலை.

ஹி ஹி ஹி😬😬 அது எல்லாம் ஒரு மரியாதை தான்...

மண்ணாங்கட்டி...

சரி சரி போய் வேலைய பாருங்க சிஸ்டர், நானும் போய்...

என்ன கொரியன் சீரியல் பார்க்கணும் அதானே ??

க க க போ😋...

சரி வா டீ குடிச்சிட்டு போலாம்..

இல்லைக்கா , போய் மொதல்ல ஃப்ரெஷ் ஆகிட்டு தான் சாப்பிடற வேலை எல்லாம்...

ஓகே ஓகே...

Bye க்கா.... Bye da செல்லம்👋...
என்று பானுவிடமும் அவள் வயிற்றிலிருக்கும் அவள் பிள்ளையிடமும் விடைபெற்றுக்கொண்டு படிகளில் ஏறினாள் மீரா.

இதே நேரம் தன் பைக்கை நிறுத்திவிட்டு வந்த கௌசிக்கிற்க்கு இவர்களது சம்பாஷனைகள் காதில் விழ மீராவிடம் பேசவேண்டும் என்று எண்ணியவன் அவள் சென்றுவிடப் போகிறாளோ என்ற எண்ணத்தில் நடையை எட்டிப்போட்டான்.

மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தவள் தன் பின்னால் நடை சத்தம் கேட்க திரும்பியவள் கௌசிக்கை கண்டவுடன் அகல புன்னகையை😊 அவனுக்கு அளித்தாள்.

எப்படி அவளைக் கூப்பிட்டு பேசுவது என்று தடுமாற்றத்தில் இருந்த கௌசிக்கிர்க்கு பெரும் அறுதலாகி போனது அவளது புன்னகை.

ஹாய்🙂 என்ற சொல்லை அவளது புன்னகைக்கு பதில் ஆக்கினான்.

ஹாய்.... நீங்க தான் third floor க்கு புதுசா வந்திருக்கீங்களா? என்று படிகளில் எறிக்கொண்டே கேட்க,
ஆமாம் என்று அவளை இரண்டு படிகள் விட்டு தொடர்ந்த கௌசிக்கின் பதில் சென்று சேர்ந்தது.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now