எனக்காக 9

313 16 0
                                    

மெல்லிய புல்லாங்குழல் இசை மியூசிக் சிஸ்டமில் தவழ்ந்திட அதை ரசித்தபடி சோஃபாவில் சாய்ந்து பச்சை தேயிலை தேநீரை (கிரீன் டீ தாங்க ) மெதுவாக பருகிக்கொண்டிருந்தான் கௌசிக்.

இந்த மாதிரி காலையில் இசையை ரசிப்பது என்பதெல்லாம் அவன் கல்லூரிக் காலத்தோடு விட்டுப்போனது. வேலையில் பொறுப்பேற்றவுடன் வேலைப்பளு வில் ரசிப்பதற்கு எல்லாம் நேரம் கிடைக்கவில்லை.

ஆனால் இங்கு வேலை பளு இல்லை என்பதால் நிறைய நேரமும் கிடைப்பதால் விட்டுப்போன பழக்கங்களான இசை கேட்பது, புத்தகம் படிப்பது, சமைப்பது என்று தன் விருப்பமான செயல்களை தொடர ஆரம்பித்திருந்தான் .

காலையில் எழுந்து தியானத்தையும் யோகாவையும் செய்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் கிரவுண்டில் ஜாகிங் முடித்து வீட்டிற்கு வந்து குளித்தவுடன் அந்த கிரீன் டீ உருஞ்சிகொண்டு பாட்டு கேட்டுக்கொண்டே அமர்ந்துவிடுவான் .பின்பு சிறிது நேரத்தில் காலை உணவை சமைத்து பத்திரிக்கை பார்த்துக்கொண்டே சாப்பிட்டு முடித்து அலுவலகம் கிளம்பி சென்றால் வேலைக்கு நடுவில் ஒவ்வொரு நாள் மதிய உணவு மறந்து போகும் இல்லையேல் canteen அல்லது வெளியே வேலை என்றால் அங்கிருக்கும் hotel என்று முடிந்து விடும்.

சாயங்காலம் ஆறு அல்லது ஏழு மணிக்கு வந்தால் குளித்துவிட்டு அர்ஜுன் கேசவன் அவர்களுடன் மும்பையின் வேலைகளை பற்றி கலந்துரை முடித்துவிட்டு சமையல் செய்து இரவுணவை முடித்து விட்டு படுக்க 12 ஆகி விடும் .

கௌஸிக்கின் பொழுதுகள் இவ்வாறாக கழிந்தது அவன் இங்கு வந்திருக்கும் நோக்கத்திற்கு சிறு அடி கூட எடுத்து வைய்க்காமலேயே.

அன்றும் பத்திரிக்கை படித்துவிட்டு நிமிரும் போது கடிகாரம் 8: 45ஐ காட்ட பைக் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

மும்பையில் எப்பொழுதும் சுற்றிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதாலும் பெரிய பெரிய ஹோட்டல்களுக்கு மீட்டிங் செல்லவேண்டும் என்பதாலும் காரையே பெரும்பாலும் உபயோகிப்பான்.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now