அத்தியாயம் 12

256 10 0
                                    

அலுவலகத்தில் அனைவரும் மதிய உணவுக்குச் சென்றிட மீரா மட்டும் தன் இடத்தில் மேஜையில் கவிழ்ந்திருந்தாள்.

அதற்கு முக்கிய காரணம் அவளது டிப்பென் பாக்ஸில் இருந்த கோதுமை தோசைகளே . ஆசையாய் சப்பாத்தி செய்ய பிசைந்த மாவில் தண்ணீர் அதிகமாக அது தோசையாக மாறிவிட்டிருந்தது. எங்கே இன்னும் மாவு சேர்த்தால் போன தடவை போலவே நான்கு நாட்கள் சப்பாத்தியே சாப்பிட வேண்டிய நிலை வந்துவிடுமோ ? என்ற பயத்தில் விட்டுவிட்டாள்.

ஆனால் கோதுமை தோசை மீராவின் பிடிக்காத உணவுகளில் ஒன்று... அதை வீணாக்கவும் மனம் வரவில்லை , அதை சாப்பிடவும் பிடிக்கவில்லை. அதனால் தான் சோகமே உருவாய் கவிழ்ந்திருந்தாள்.

ஹாய், மிஸ் .மீரா ... அந்த குரல் கூப்பிட்டவர் யார் என்பதை தெரிவிக்க உண்மைதானா என்பதை போல நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் விரிந்தது.

அவன் தான்... ராகுல் !!!

என்னங்க சாப்பிட போகலையா?என்று அவன் கேட்க அவளோ அக்கேள்வி காதில் விழாத அளவு அதிர்ச்சியில் அவனையே பார்த்துக் கொண்டே இருந்தாள்.

ஹலோ , உங்களைத்தான் மீரா... என்று அவன் அவள் முகத்திற்கு நேராக விரல் சொடுக்கிய பின்பே தன்னிலை வந்தாள்...

என்ன ராகுல் சார்?

என்ன என்னவா? நான் நீங்க சாப்பிட போகலையான்னு கேட்டேன் .

அது நான்... இல்லை.... இப்போ ... ம்ம்... இப்போ சாப்பிட தான் போறேன் என்று கூறிக்கொண்டே வேக வேக மாக டிப்பன் பாக்ஸை எடுத்துகொண்டு டைனிங் ஹாலுக்கு விரைந்தாள்.

டேபிளில் அமர்ந்த பின்பும் கூட வேகமாய் துடித்த இதயத்தில் கை வைத்தாள். ஸ்டுப்பிட் மீரா , அவனே வந்து பேசினான் , நீ என்னவோ பேய்யை கண்டவளாட்டம் ஓடி வந்திருக்க , அவன் உன்னைய பத்தி என்ன நினைப்பான் .. லூசு லூசு ... என்று அவளை அவளே வசைபாடி கொண்டே சாப்பிட தோசைகளும் உள்ளே போயின..

என்னடா மச்சான் அந்த புள்ளகிட்ட எல்லாம் பேசிட்டு வர்ற? என்று ராகுல் மீராவின் பேசியதை பற்றி அவன் நண்பன் கரன் கேட்டான்..

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now