அத்தியாயம் 15

262 10 2
                                    

கௌசிக்... பிளீஸ்... இன்னிக்கு ஒரு நாள் விட்டுடேன்... டயர்டா இருக்கு.... என்று மீராவின் குரல் காதில் விழ...

இதயத்தில் ஒரு திக்கொடு ," என்னடா நடக்குது இங்க?" என்றபடி நாமும் கொஞ்சம்  டீசெண்ட்ட் ஆ நடந்துகோங்கப்பா , நாங்க வரப்போறோம் என்ற படி நாம் உள்ளே போக...

அங்கே நடந்து கொண்டிருந்ததை பார்த்தவுடன் க்கும்... அதானே பார்த்தோம் இதுக எல்லாம் அதுக்கு சரிபட்டு வராதுகப்பா... என்ற நினைப்பு எழுந்தாலும்.. அங்கே நடந்து கொண்டிருந்தது ஆச்சர்யமான  ஒன்று தான்...

மீரா ஏதோ சினிங்கி கொண்டே  துணியை மடித்து வைய்த்துகொண்டிருக்க, கௌசிக் தரையில் கால் நீட்டி  சுவரில் சாய்ந்து மொபைல் பார்த்துக்கொண்டிருந்தான் .. அவள் புலம்புவது காதில் விழுந்தாலும் அதை கண்டுகொள்ளாமல்...

துணியை மடித்து பீரோவில் அடுக்கிவிட்டு வந்தவள் அவன் அருகில் அமர்ந்து கையை நீட்டினாள்.

தன் சட்டை பாக்கெட்டில் இருந்த அவளது மொபைலை கொடுக்க போனவன் கிட்சன் ஸ்லேப்...

சுத்தம் பண்ணிட்டேன் சாமி... காலைலேயே பண்ணிட்டேன்... இப்பவாது மொபைலை கொடு.... என்ற படி அவனை முறைக்க...

ஒரு குறும்பு புன்னகையோடு அவளிடம் மொபைலை அளித்தான்...

அதை வாங்கிக்கொண்ட பின்பும் அவள் முகம் உம் மென்றே இருக்க...
அவன் கண் அகலாது அவளையே புன்னகையோடு பார்த்தான்...

அவன் பார்த்துகொண்டு இருப்பது தெரிந்தாலும் மூஞ்சியில் சிரிப்பு காட்டாமல் மொபைலை பார்த்தவள் ஐந்து ஆறு நொடிகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் சிரித்து விட...

உனக்கு வராதத எல்லாம் ஏன் முயற்சி பண்ற?

போ கௌசி...

(கௌசி 😳)

இன்னிக்கு லீவ் நாள் தானே இன்னிக்கு கூட ஃப்ரீ ய இருக்க விடாம பாரு வேளை செய்ய வைய்கர... ஒரு நாள் இதுக்கும் லீவ் விட்டா என்னவாம்... பாரு மொதல்ல என்னோட வீடு எவ்ளோ lively யா இருக்கும் , இப்போ பாரு எப்படி அலங்கோலமாக இருக்குன்னு..

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now