அத்தியாயம் 29

270 10 0
                                    

மீராக்கே புரியவில்லை, தான் கால் பதிய நடக்கிறோமா? அல்ல பறக்கிறோமா ? என்பது.

அவ்வளவு உற்சாகம், இன்று காலை  அவளது தங்கை சிவரஞ்சனி கூறிய விஷயத்தை கேட்டதிலிருந்து.

ஆபீஸ் க்கு கிளம்பிக் கொண்டிருந்த வேளையில் அவளது அலைபேசி பாட, எடுத்தாள்...

சொல்லு சிவா....

அக்க்.....கா.... என்று உரக்க கேட்ட குரலில் காதில் இருந்து அழைபெசியை   தொலைவில் வெய்த்தால்...

அடி கொஞ்சம் மெதுவா பேசு... என்றவாறு மீண்டும் காதில் பொருத்த...

எருமை... நான் சொல்றத கேளு... அப்பறம் நீயும் இப்படி தான் கத்துவ...

அப்டியா.... அப்படி என்னங்க விஷயம்..?

அப்பா ஊர்ல இருந்து வந்துட்டாங்க...

ம்ம், முந்தா நேத்தே வந்துட்டாங்கன்னு எனக்கு தெரியும் டி லூசு..

அக்கா... அக்கா... சரியான தத்தி கா நீ..!!

ஆமாண்டி , நீ ஒருத்தி தான் சொல்லலை ... நீயும் சொல்லு...

அச்சோ அக்கா... அப்பா வந்ததும் அம்மா எந்த விஷயத்தை பத்தி பேசுவாங்க..?

எந்த விஷயம் சிவா... என்றவாறே தன் பையில் லேப்டாப் பை திணித்து கொண்டிருந்தாள்...

ஆ... உன்னோட கல்யாண விஷயம் பத்தி...

அதுக்கு என்... ன...
மெதுவாய் சிவா சொல்லும் விஷயம் புரிபட.... கையில் இருந்த பையை நெஞ்சோடு வைத்துக்கொண்டு கீழே அமர்ந்தாள்..

ஹலோ அக்கா..

சி...சிவா... சி..சித்தப்பா...என்ன சொன்னாங்க...?

அ... து....வா... என்று வேண்டும் என்றே சொல்லாமல் இழுத்து சிவரஞ்சனி நிறுத்த ....

அவள் அமைதியாக இருக்கும் அந்த நொடிகள் மீராவின் இதயம் முரசு போல கொட்ட ஆரம்பித்தது...

சொல்லு டி...

அக்கா ... உனக்கு ஆபீஸ் க்கு நேரம் ஆச்சு பாரு ... நீ கிளம்பு ...நான் சாயங்காலம் பேசறேன் என்று மீராவின் பதட்டத்தை உணர்ந்தும் வேண்டும் என்றே அதை அதிகப் படுத்துமாறு சீண்டினாள்...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now