அத்தியாயம் 37

230 8 2
                                    

அண்ணா உள்ள வரலை... Drop பண்ணிட்டு அப்படியே கிளம்பிட்டார்.

Oh...

சரி நீ பேக்கிங் எல்லாம் முடுச்சிட்டியா? என்று அகிலனுடன் லேப்டாப்பில் வீடியோ கால் பேசிக் கொண்டிருந்தாள் தான்வி.

இன்னும் இல்லை ,நாளைக்கு தான் ஆரம்பிக்கனும்...

டேய்... இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு flight க்கு... இங்க வர்ற idea இருக்கா,இல்ல அங்கேயே செட்டில் ஆக போறியா brother?

ஏன் நான் அங்க வர்லைனா சந்தோஷமா இருக்கலாம்னு பார்கரியா ... விடமாட்டேன் பிசாசே.இன்னும் மூணு நாள்ல அங்க வந்து வாழ்நாள் முழுக்க உன்னை torture பண்ணலை நான் அகிலன் கிடையாது.

போடா கருங்கொரங்கு... யாரு யாரு கிட்ட மாட்டிக்க போரங்கன்னு பாரு ...
என்று அண்ணன் தங்கை சண்டை போட்டுக் கொண்டிருக்க , கொஞ்சம் தள்ளி, கொண்டுவந்திருந்த தங்களது துணிகளை wardrobe இல் அடுக்கிக் கொண்டிருந்த மீரா க்கு அதை கேட்டு சிரிப்பு வந்தது.

அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு என்று இந்த அறையை கொடுத்து விட்டனர். இந்த ஒரு அறையே தங்களது பாதி விட்டின் அளவை ஒத்திருந்தது. வீட்டை தான்வி சுற்றிக் காமிக்க சிவா மீரா இருவரும் பிரமித்து போயினர்.

படங்களில் மட்டுமே இந்த மாதிரி வீட்டை பார்த்திருந்தனர்... இன்று நேரில் பார்க்க பார்க்க அவர்களுக்கு அதிசயமாய் பட்டது.
அந்த வீட்டின் உள்ளே பண்ணி இருக்கும் interior decoration க்கு மட்டுமே கோடிக் கணக்கில் செலவாகி இருக்கும் என்பது புரிந்தது.

ஒவ்வொரு இடத்திலும் அவர்களது பண செழுமை தெரிந்தது. ஆனால் அந்த வீட்டை விட இவர்களுக்கு ஆச்சிரியமாய் இருந்தது , அந்த வீட்டினரின் குணம் தான். பணக்காரர்கள் என்ற துளி கூட கர்வம் இல்லாமல் பழகும் விதம்.

அங்கே வேலை செய்பவர்களிடம் கூட தன்மையாய் தான் பாட்டி மற்றும் பேத்தி பழகினர்.

இது எல்லாமே சிவா மீரா இருவர் மனதிலும் ,கௌசிக்கின் மெசேஜ் பார்த்த பின்பும் லேசாக ஒட்டியிருந்த மிரட்சியையும் போக்கியது.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now