எனக்காக 1

1.8K 25 3
                                    

காலை 8 மணி ,சூரிய கதிர்களால் நனைந்து கொண்டிருந்த மும்பை மாநகரில் M.S Industries என்ற இரும்பு பைப்புகள் தயாரிக்கும் அந்த பெரிய தொழிற்சாலைக்குள் அங்கிருந்த காவலாளியின் சல்யூட்டோடு வண்டிகள் நிறுத்தும் இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு இறங்கினான் அவன்....

அவன் கௌஷிக்...ஆறடி உயரத்தில் கம்பீரமாய் இருப்பவன்...27 வயதில் மாநிறத்தில் பார்பவரை வசிகரிக்கும் முகமுடையவன்...

இவன் தொழிற்சாலைக்குள் உள்ளே செல்ல அவனை பார்த்து அங்கு மேனேஜர் விரைந்து வந்தவர் காலை வணக்கத்தை தெரிவிக்க இவனும் பதிலுக்கு தெரிவித்து அவரிடம் இன்னிக்கு அனுப்ப வேண்டிய ஆர்டர்க்கு எல்லாம் ரெடியா?என்று ஹிந்தியில் வினாவ( ithu mumbai la nadakarathala ellorum hindi la pesikaranga...so nan atha tamil ah sollren)

ரெடிங்க சார்,நீங்க ஒரு தடவ பார்த்துட்டா அனுப்பிடலாம் என்று சொல்ல அவருடன் சென்று எல்லாம் தரமாய் இருப்பதை சோதித்து திருப்தி அடைந்தவன் அந்த ஆர்டர் பண்ணிய இடத்துக்கு பொருட்களை மேனேஜரிடம் அனுப்ப சொல்லிவிட்டு அனைத்து இடங்களிலும் சென்று பார்த்துவிட்டு மேனேஜரின் அறைக்கு வந்தான்...

எழுந்து நின்ற மேனேஜரை அமர சொன்னவன் அவருக்கு எதிரே இருந்த ஆசனத்தில் அமர்ந்து பைல்களில் மூழ்கினான்...

ஒருமணிநேரம் சென்றிருக்க அனைத்து பைல்களையும் பார்த்து முடித்துவிட்டே நிமிர்ந்தான்....

மேனேஜர் சார் ,அந்த கவர்மென்ட் ஆர்டர்க்கு கொட்டேஷன் ரெடி பண்ண சொன்னேன் பண்ணியாச்சா?என்று வினாவ.

இன்னும் 2நாள்ல முடிஞ்சரும் சார்

சீக்கிரம் இன்னும் ரெண்டு நாள்ல கண்டிப்பாய் முடுஞ்சாகனும் என்று அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் குரலில் மட்டும் அழுத்தம் கொடுத்து சொல்ல வேலையில் கண்டிப்புடன் இருப்பவன் இந்த அளவு பொறுமையாய் சொன்னதே பெரிது என்று நினைத்த மேனேஜர் பலமாய் தலையாட்டினார்...

பின்னர் அங்கிருந்து மும்பையின் மையத்தில் இருந்த ஜவுளிக் கடலான K.R Textiles குள் நுழைந்தவன் அங்கு வரவு செலவு கணக்குகளையும்,கையிருப்புகளையும் பார்த்துவிட்டு மேனேஜருடன் அங்கிருந்த ஐந்து தளங்கலில் நடைப்பெற்றுக் கொண்டிருந்த வியாபாரத்தை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.அப்பொழுது தனது அலைபேசி அழைக்க பார்த்தவன் தனது அஸிஸ்டன்ட் அர்ஜுனின் பெயர் ஒளிர காதில் வைத்தவன்...

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now