அத்தியாயம் 46

305 7 8
                                    

தங்களது அறையின் ஜன்னலின் வழியே ,வெளியே தெரிந்த தோட்டத்தை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தாள் மீரா.

அப்பொழுது தான் அறைக்கு வந்த சிவா , தான் வந்ததை கூட உணராமல் மரமாய் நின்றிருந்த தன் அக்காவை வருத்தத்தோடு  பார்த்தாள்.

பார்ட்டியில் இருந்து வந்ததிலிருந்தே அவளது முகமே சரி இல்லாமல் இருந்தது. ஒரு வேலை அந்த அர்ஜுன் ,  வசுந்தரா மற்றும் மாமா பத்தி சொன்ன விஷயத்தை நினைச்சு கவலைபடுகிறாள் போலவே... என்று நினைத்தவள் 

அக்கா.....

  என்ற தன் தமக்கையை அழைத்தாள்.

சிவாவின் குரலில் திரும்பி பார்த்த மீராவின் கண்கள் மெலிதாக கலங்கி இருக்க , அதை கண்ட சிவா , மீரா வின் அருகில் சென்று அவளை பின்னால் இருந்து அணைத்து , மீராவின் தோள் வளைவில் முகம் புதைத்தாள்.

என்ன ஆச்சு சிவா ?ஏன் ஒரு மாதிரியா இருக்க?

இத தான் நான் கேட்கணும்ன்னு வந்தேன் கா... நீ தான் ஒரு மாதிரியா டல்லா இருக்க... அர்ஜுன் சொன்னதை பத்தி கவலைப்பட்ரியா ?

ம்ஹ்ம்ம் ...இல்லை ...என்றவாறு மீரா தலை அசைக்க ...

பின்ன என்ன அக்கா, அப்பறம் ஏன் சோகமா இருக்க?

சோகமா எல்லாம் ஒன்னும் இல்லை... யோசனையாக இருக்கேன்..

என்ன யோசனை ...?

அது.... நம்ம வந்து ஒருவாரம் ஆகிடுச்சு , நான் ஆபீஸ் போகணும்ல ... இல்லேன்னா வேலை போய்டும் டா... அதான் ஊருக்கு கிளம்பலாம்ன்னு பார்க்கறேன்...

தன் அக்காவை இழுத்துக் கொண்டுபோய் கட்டிலில் அமரவைய்த்தவள், லூசா மீராக்கா நீ, வேலையாம் பெரிய வேலை ... கௌஷிக் மாமா நினைச்சா உன்னோட கம்பெனி மாதிரி ரெண்டு மூணு  கம்பெனி கூட  ஆரம்பிக்கலாம் ...

கௌஷிக் ஆரம்பிக்கரதுக்கும் நான் வேலைக்கு போறதுக்கும் என்ன சம்பந்தம் சிவா...?

அட என் அறிவு கொழுந்தே ... கௌஷிக் மாமா ஆரம்பிச்சா ,அவரு பொண்டாட்டி  நீ தானே அந்த கம்பனிகளுக்கு  ஓனர் அம்மா.. அதனால  உன்னோட கம்பெனி நியாபகத்தை மூட்டை கட்டி வெச்சிட்டு கௌஷிக் மாமாவின்  லவ்வ வெளிய கொண்டு வர்ற வழியை பாரு....

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now