அத்தியாயம் 13

232 9 0
                                    

மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த கௌசிக்கின் கண்களில் நடந்துசென்று கொண்டிருந்த அந்த பெண் தென்பட்டாள்.

மீரா போல இருக்கே  என்று நினைத்தவன் , அவளை தாண்டி சென்று கண்ணாடியில் பார்க்க அது மீரா தான்.

வண்டியை நிறுத்தி அவளுடன் பேசுவோமா? என்று நினைத்தாலும் ஏனோ அவன் மனம் அதற்கு சம்மதிக்க விருப்பமில்லாமல்  இருக்க வண்டியை நிறுத்தாமல் சென்றுவிட்டான்.

ராயல் என்பீல்டு  வண்டியின் சத்தம் கேட்டு திரும்பியவள் அது கௌசிக் என்பதை உணர்ந்து பார்த்தால் டாடா காமிக்கலாம் என்ற எப்பொழுதும் போன்ற சிறுபிள்ளை நினைப்பில் பார்த்துக்கொண்டிருக்க அவனோ அவளை கவனியாமல் சென்றுவிட
ச்ச , பார்க்கவே இல்லை!! என்ற சலிப்போடு  நடையை எட்டி போட்டாள்.

என்னங்க பாயசம் ஆறுவதுக்குள்ள வந்து  குடிங்க .... அப்போ தான் நல்லா இருக்கும் என்று லலிதா ரகுராமனை கூப்பிட

ஆமா ஆமா ... சூடாயிருந்த தான் ருசி தெரியாம உள்ள போய்டும் ... இல்லைனா மனுஷன் சாப்பிட முடியுமா? என்று தன் மனைவியின் கைமணம் அறிந்தும் லலிதா வை வேண்டும் என்றே வம்பிலுக்க

அவரது கன்னத்தில் ஒரு இடி இடித்துவிட்டு , இவளோ லொள்ளு பேசிட்டு பாயசத்தில் கை வைய்ங்க அப்புறம் இருக்கு என்ற மிரட்டலலோடு தனக்கும் பானுக்கும் பாயசத்தை கப்பில் ஊற்றிக்கொண்டு வந்து அமர்ந்தார் லலிதா.

அப்படியெல்லாம் சொல்ல கூடாது லலி குட்டி ... என்னதா இருந்தாலும் பொண்டாட்டி கையாள பாயசம் சாப்பிட கொடுத்து வைக்கணும் தெரியுமா  என்றவர் தனக்கும் ஒரு கிண்ணத்தில் பாயசத்தை ஊற்றிக்கொண்டு வந்து அமர்ந்தார் ரகுராமன்.

அதை கண்ட பானுவும் லலிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

சூப்பர் டா ... என் பொண்டாட்டிய விட யாரல இவளோ அருமையா பாயசம் செய்ய முடியும் சொல்லு... என்று சப்பு கொட்டிக்கொண்டே சாப்பிட

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now