அத்தியாயம் 33

210 6 0
                                    

நாலு நாளு தான் ஆச்சு, ஏனோ நான்கு யுகமாய் தோன்றியது மீராக்கு. வாழவேண்டும் என்ற கடமைக்கு வாழ்வது போல இருந்தது.

கௌசிக் கோட ஒவ்வொரு வார்த்தையும் நினைக்கும் போதே இதயத்தில் வலி ஏற்பட , தன் மேலயே கோபம் வந்தது அவளுக்கு.

அன்றும் அப்படித்தான், ஆபீஸில் system முன்னாடி வேலையை பார்க்க அமர்ந்திருந்தாலும், உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றிக் கொண்டு இருக்க , தலையை பிடித்து கொண்டு அமர்ந்தாள்.

இன்று காலை தான், கொடுத்திருந்த வேலையை முடிக்காமல் இருந்ததற்கு மேனேஜர் இவளை கூப்பிட்டு திட்டியிருக்க ,இன்னும் இப்படியே இருந்தால் இந்த வேலையும் போய் விடும் , கௌசிக் சொன்னது போல ஏதோ ஒரு luck இல் வேலை கிடைத்துள்ளது அதை காப்பாற்றிக் கொள்ள வேணும் என்ற வலி நிறைந்த எண்ணத்தோடு மனதை கஷ்டப்பட்டு அடக்கி வேலையில் ஆழ்ந்தாள்.

மதியம் சாப்பிட்டுக் கொண்டிருக்க கால் வந்தது.

ஹலோ சித்தி...

மீரா... நாளைக்கு உனக்கு ஆபீஸ் leave தான?

ஆமா ,சித்தி...

அப்போ இன்னிக்கு கொஞ்சம் நேரமா வீட்டுக்கு வந்திடு...

இன்னிக்கு? கொஞ்சம் வேலை இருக்கு சித்தி..

பரவால்ல ,late ஆனா உன் சித்தப்பாவ வரசொல்ட்ரேன் , கிளம்பி வந்திடு ... சரியா...

தான் இருக்கும் நிலைமையில் வீட்டிற்க்கு செல்ல பிடிக்கவில்லை என்றாலும் , என்றும் ஏதும் சொல்லா சித்தியே கூப்பிடும் போது மறுக்க முடியவில்லை.

சரிங்க சித்தி...

ம்ம்.. சாப்டியா?

ம்ம்... ஆச்சுங்க..

சரி வெச்சிடறேன்... நேறங்காலத்தோட வர்ற வழிய பாரு.

ம்ம்..

எதுக்காக இவளோ அவசரமா வர சொல்றாங்க .... என்ன பிரச்சினை ன்னு தெரியலையே... என்ற எண்ணப்படி தன் தங்கை சிவா விர்க்கு கால் பண்ண... அவள் அதை attend செய்யவில்லை...என்ன பண்றா இவ ? என்று  மறுபடியும் இரண்டு தடவை கால் செய்தும் attend ஆகாததால்...ஒரு பெருமூச்சோடு வேலையில் ஆழ்ந்தாள்.

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now