1 திருமணம்

4.3K 76 12
                                    

1 திருமணம்

மும்பை

சாண்டாக்ரூஸ் விமான நிலையத்தின் உள்ளே தலை தெறிக்க ஓடிச் சென்றான் முகுந்தன், சென்னை செல்லும் விமானத்தை சென்றடைய. அவன் தான் நமது கதையின் கதாநாயகன். மும்பையில் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறான். இன்று விடியற்காலையில் அவனது அப்பாவிடம் இருந்து அவனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அவனது அம்மா குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டதாகவும், அவரது நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் அந்த செய்தி கூறியது. எதைப் பற்றியும் யோசிக்காத முகுந்தன், உடனடியாய் சென்னைக்கு கிளம்பி விட்டான்.

சென்னை

இரண்டு மணி நேரத்தில் சென்னையை வந்தடைந்தது அந்த ஏர்-இந்தியா விமானம். முகுந்தனிடம் இருந்தது வெறும் ஹேண்ட் லக்கேஜ் மட்டும் தான் என்பதால், தனது லக்கேஜ்க்காக அவன் அங்கு காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஒரு டாக்ஸியை பிடித்துக் கொண்டு, தனது வீடு இருக்கும் சிங்கப்பெருமாள் கோவிலை நோக்கி விரைந்தான்.

அவன் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்த போது, வாசலில் வாழை மரமும், தோரணங்களும் அலங்கரித்துக் கொண்டிருப்பதை பார்த்து  குழப்பத்துடன் முகம் சுருக்கினான். அது அவன் தாத்தா கட்டிய வீடு. அதை அப்படியே நவீனமாய் புதுப்பித்து இருந்தார் அவனது அப்பா கேசவன். வீட்டின் உள்ளே நுழைந்தவன், அவனது பந்துக்கள் முற்றத்தில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருப்பதை கண்டான்.

அவனது அம்மா சீரியஸாக இருக்கிறார் என்று கூறினார்களே? இவர்களையெல்லாம் பார்த்தால் அப்படி தெரியவில்லையே...! தன் அம்மாவின் அறையை நோக்கி ஓடிய அவன், யார் மீதோ மோதிக்கொள்ள, எதிரில் நின்றிருந்தது சாட்சாத் அவனது அம்மா ஜானகியே தான். அவரைப் பார்த்து மேலும் குழம்பினான் முகுந்தன்.

"அம்மா, உங்களுக்கு..."

"எனக்கு ஒண்ணுமில்ல. நான் நல்லா இருக்கேன்" என்றார் அவனது பேச்சை துண்டித்த ஜானகி.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now