11 மீராவின் பார்வையில்...

753 63 6
                                    

11 மீராவின் பார்வையில்...

தன் மனைவியின் வருகையால் கடுமையான சங்கடத்திற்கு ஆளானான் முகுந்தன். வாசுவிற்கு அவளை பிடித்திருக்கிறது. நந்தாவிற்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அவள் தங்கள் அணியில் சீக்கிரமே இடம்பிடிப்பாள்  என்று ஜெகதீஷிடம் கூறினான் வாசுதேவன். அவன் கூறியது போல் மீரா அவர்கள் அணியில் இடம் பிடித்து விடுவாளா? அவள் நேர்முகத் தேர்வில் அளித்த பதிலை வைத்து பார்க்கும் போது, ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாக புரிகிறது. இந்த வேலை எந்த அளவிற்கு அவளுக்கு முக்கியமோ, அது போலவே, அவளது கணவனையும் முக்கியமாக கருதுகிறாள். தன் கணவனுக்கு உண்மையானவளாக இருப்பேன் என்று அவள் கூறினாள். இவர்களுடன் அவள் இணைந்த பிறகும் அவளுடைய கணவனுக்கு அவள் உண்மையாக இருப்பாளா? அப்படி இருக்கவும் முடியுமா? அவள் மனம் மாற நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை, அவள் வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு, *அந்த கணவனுக்கு* அவள் உண்மையாக இருக்க நினைக்கலாம் அல்லவா? இவன் தான் அவளுக்கு விவாகரத்து அளிக்கவும் தயார் என்று கூறி விட்டானே...! ஒருவேளை அவள் அவனிடம் விவாகரத்து கேட்பாளோ? மதியஉணவு இடைவேளையின் போது தங்களுக்குள் விவாதிக்க, மிகவும் சுவாரசியமான தலைப்பு இருக்கிறது என்று வாசுதேவன் ஜெகதீஷிடம் கூறினானே...!  முகுந்தனுக்கு தெரியும், அவன் கூறிய அந்த சுவாரசியமான தலைப்பு அவனது மனைவி தான் என்பதும், அவள் நேர்முகத் தேர்வில் அளித்த பதிலும் தான் என்பதும். அவர்கள் மீராவைப் பற்றி என்ன பேசப் போகிறார்கள்? அவனது பாழாய் போன மனம், ஏன் மீராவை சுற்றி வருகிறது என்று அவனுக்கு புரியவில்லை.

.......

மறுபக்கம் மீராவுக்கு பயிற்சி அளிக்க தொடங்கி விட்டான் நந்தகோபால். *தேவதை* விஷயத்திற்கு அப்பாற்பட்டு, அவனுக்கு மீராவை ரொம்பவே பிடித்திருந்தது. அவளது புத்தி கூர்மையையும், எந்த ஒரு விஷயத்தையும் அவள் பார்க்கும் கண்ணோட்டமும், அவளிடம் இருந்த பொறுமையும், மற்றவர் மீது காட்டும் அக்கறையும், அனைத்தும் அவனுக்கு பிடித்திருந்தது. சீக்கிரமே, அவள் தேவதை தான் என்ற முடிவுக்கு அவன் வந்து விட்டான்.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Kde žijí příběhy. Začni objevovat