63 சம்பவம்

508 39 8
                                    

63 சம்பவம்

யோசனையுடனே இருந்தான் முகுந்தன். மீரா பேசிய வார்த்தைகளை ஒவ்வொன்றையும் மறுபடி மறுபடி யோசித்துக் கொண்டே இருந்தான். ராதாவின் வீடு இருந்த நிலையையும் யோசித்தான். அவ்வளவு ஏழ்மை நிலையில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு தப்பான எண்ணம் இருக்க முடியுமா? *அண்ணா* என்று அழைக்கும் ஒருவனை, அவள் தவறாக எண்ண வாய்ப்பிருக்கிறதா? எதற்காக அவள் இவ்வாறெல்லாம் செய்து கொண்டிருக்கிறாள்? மீராவுக்கு துரோகம் இழைத்துவிட்டு அவன் அவளிடம் வருவான் என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கிறாளா? அவளால் அவனை மடித்து விட முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாளா? அவளது அம்மா பக்கவாதம் வந்து படுத்து கிடக்கிறார். தன் அம்மாவை காப்பாற்றி தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு பெண், இப்படி எல்லாம் செய்வாளா? தனது கௌரவத்திற்கு பங்கம் ஏற்படும் காரியத்தை செய்ய, அந்தப் பெண்ணுக்கு எப்படி துணிவு வரும்?

தன்னை அணைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த மீராவை பார்த்த அவன், அவளை காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தனக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தான். இந்த உறவு நிலைக்குமா என்று எண்ணி அவள் எப்பொழுதும் கலங்க கூடாது. அப்படி அவள் நினைத்தால், அது தான் அவனது வாழ்வின் மிகப்பெரிய தோல்வி! மிகப்பெரிய போராட்டத்திற்கு பின் அவளை தன் வாழ்க்கையில், தன் அறையில் அவன் கொண்டு வந்து சேர்த்திருக்கிறான். அவன் பட்ட பாட்டுக்கு அவள் தகுதியானவள் தான். அது  வீணில் கரைந்து விடக்கூடாது என்று உறுதிப் பூண்டான் முகுந்தன்.

மறுநாள்

மீராவுடன் அலுவலகத்துள் நுழைந்தான் முகுந்தன். அவர்களை ராதா ஓரக்கண்ணால் பார்ப்பதை அவன் கவனித்தான். அதை மீராவும் கவனிக்கத்தான் செய்தாள். முகுந்தனை ஏறிட்ட மீரா, சாதாரணமாய் புன்னகைத்தாள் அவள் அதை கவனிக்கவில்லை என்பது போல.

அப்பொழுது வாசுதேவனின் அறையில் இருந்து ஜெகதீஷ் வெளியே வருவதை கண்ட முகுந்தன், அவனது முகம் வாடிப்போய் இருந்ததை கவனித்தான். அவனுக்கு புரிந்து போனது, வாசுதேவன், ராதாவை குறித்து அவனிடம் கூறி, அவனை எச்சரித்து இருக்க வேண்டும்.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now