69 விருந்தாளிகளா, எதிரிகளா?

692 48 6
                                    

69 விருந்தாளிகளா, எதிரிகளா?

அதிர்ச்சியில் உறைந்து நின்றான் முகுந்தன். அவனை பின்தொடர்ந்து வந்த மீரா, வந்தவர்களை வரவேற்க மறந்து, அவன் முக மாற்றத்தை பதற்றத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள்.

"மீரா...." என்று ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டார் ஜானகி. அப்பொழுது தான், தான் வந்தவர்களை வரவேற்காமல் நின்றிருந்ததை உணர்ந்தாள் மீரா. அவள் ஜானகியின் ஆசியை பெற,  அவரது பாதம் தொட முயன்ற போது, அவளை தடுத்தார் ஜானகி.

"நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். சும்மா குனிஞ்சு நிமிராத" என்றார் அவர்.

*ஆரம்பிச்சுட்டாங்க* என்பது போல் கண்களை மூடினான் முகுந்தன்.

"சரிங்க மா" என்று ஜானகியை பார்த்து புன்னகை புரிந்தாள் மீரா.

அவளது தலையை தொட்ட ஜனார்த்தனன்,

"எப்படிடா இருக்க?" என்றார்.

அவள் பதில் கூறும் முன்,

"அவளுக்கு என்ன? அவ நல்லா தான் இருப்பா. அது தான் மாப்பிள்ளை அவ கூட இருக்காரே" என்றார் வைதேகி.

ஆமாம் என்று தலையசைத்தான் முகுந்தன்.

"எல்லாம் சரி, நீங்க எல்லாரும் திடீர்னு, சொல்லாம கொள்ளாம  எதுக்காக இங்க வந்திருக்கீங்க?" என்றான் முகுந்தன்.

"நாங்க தாத்தா பாட்டி ஆக போறோம்னு தெரிஞ்ச பிறகு, நாங்க எப்படி நிம்மதியா சென்னையில உட்கார்ந்துகிட்டு இருக்க முடியும்? என்றார் கேசவன்.

"ஓ..."

"இன்னைக்கு காலையில உங்க அம்மா என்கிட்ட சமாச்சாரத்தை சொன்ன பிறகு, என்னால அங்க இருக்கவே முடியல" என்றார் அவர்.

"ஆமாம் மாப்பிள்ளை, மீரா முழுகாம இருக்கிற விஷயத்தை என்கிட்ட சொன்னா. எங்களுக்கும் அவளை பார்க்கணும்னு தோணுச்சு. அதனால தான் உங்க அம்மாவுக்கு ஃபோன் பண்ணோம். அவங்களும் மும்பைக்கு வரணும்னு விருப்பப்படறதா சொன்னாங்க. எங்களையும் அவங்க கூட வர சொன்னாங்க. அதனால நாங்க எல்லாரும் கிளம்பி வந்தோம்" என்றார் வைதேகி.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now