23 காதலா?

859 66 6
                                    

23 காதலா?

மீராவுக்கு நடந்ததை எண்ணி வருத்தத்தில் ஆழ்ந்தான் வாசுதேவன். அவனால் தானே மீரா இப்படி ஒரு சம்பவத்தை எதிர்கொள்ள நேர்ந்தது? தனது நிறுவனத்தின் பத்திரிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவனை தொலைபேசியில் அழைத்தான்.

"சொல்லுங்க வாசு"

"நம்ம கம்பெனி மேகசீனை பிரிண்ட் பண்றதை நிறுத்துங்க"

"ஏன் வாசு? கிட்டத்தட்ட நம்ம அதை முடிச்சிட்டோமே"

"எனக்கு தெரியும். அதுல கொஞ்சம் எடிட்டிங் செய்ய வேண்டி இருக்கு"

"அப்படியா??? சரி"

அழைப்பை துண்டித்து விட்டு மீராவுக்கு ஃபோன் செய்தான் வாசுதேவன்.

..........

மீரா தன் அறையை விட்டு வெளியே வராமல் இருந்ததால், கவலையில் ஆழ்ந்தான் முகுந்தன். அவளது கைப்பை, வரவேற்பறையின் தரையில் கிடந்தது. அதிலிருந்த அவளது கைபேசி மணி அடித்தது. தன் அறையில் கட்டிலில் படித்து அழுதபடி இருந்தாள் மீரா. அவளது பையில் இருந்து அவளது கைபேசியை எடுத்த முகுந்தன், வாசுதேவனின் பெயர் ஒளிர்ந்ததை பார்த்து, அதை அவளிடம் சென்று கொடுக்க எண்ணினான். ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல், மீராவே அவளது அறையில் இருந்து வெளியே வந்தாள். கண்ணீர் வரைந்த கோடுகள், அவளது முகமெங்கும் பரவி கிடந்தது. அவளிடம் சத்தம் போட்டதற்காக மன வருத்தம் கொண்டான் முகுந்தன். அவனிடமிருந்து தன் கைபேசியை எடுத்துக் கொண்ட அவள், தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அந்த அழைப்பை ஏற்றாள்.

"சொல்லுங்க வாசு" அவள் தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள் என்றாலும், அவளது உடைந்த குரலை அவளால் மறைக்க முடியவில்லை.

"தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க மீரா. என்னால தான் இன்னைக்கு நீங்க இப்படி ஒரு பிரச்சனையை ஃபேஸ் பண்ண வேண்டியதா போச்சு"

அவள் அருகில் நின்று, அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் முகுந்தன்.

"உங்களை மாடலிங் செய்ய சொல்லி நான் கட்டாயப்படுத்தி இருக்கக் கூடாது" என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தினான் வாசுதேவன்.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now