61 மூன்றாவது நபர்

516 47 4
                                    

61 மூன்றாவது நபர்

முகுந்தனை அணைத்துக் கொண்டு நின்ற ராதாவை, அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா. அவளுக்கு மேல் அதிர்ச்சியில் உறைந்தான் முகுந்தன். அந்த பெண்ணிடமிருந்து அவன் அப்படி ஒரு செய்கையை எதிர்பார்க்கவில்லை. அடுத்த நொடி அவளை பிடித்து தள்ளினான். அவனையும் பிறகு மீராவையும் ஏறிட்ட ராதா,

"மன்னிச்சிடுங்க அண்ணா, மன்னிச்சிடுங்க அக்கா... நீங்க எனக்கு செஞ்ச உதவிக்கு கோடான கோடி நன்றி" சங்கடத்துடன் தலை குனிந்த படி கூறினாள் அவள்.

அங்கிருந்து வேகமாய் நகர்ந்து சென்றாள் மீரா. அவளை பின் தொடர்ந்த முகுந்தன்,  ரிமோட்டின் மூலமாக காரின் சென்டர் லாக்கை திறந்தான். மீரா காரில் ஏறி அமரவும், அவன் காரை ஸ்டார்ட் செய்து செலுத்த தொடங்கினான்.

முகுந்தனின் கவனம், சாலையில் இருந்ததை விட, மீராவின் மீதே அதிகமாய் இருந்தது. அவன் அவ்வப்போது அவளை பார்த்தபடி இருந்தான். ஒரு வார்த்தையையும் உதிர்க்காமல், அவள் இறுக்கமான முகத்துடன் வெளியே பார்த்தபடி இருந்தாள். அவளது நிலை கண்டு தடுமாறிப் போனான் முகுந்தன். நடந்ததில் அவனது தவறு ஏதுமில்லை என்றாலும், மீராவின் மனநிலை அவனுக்குப் புரிந்தே இருந்தது. அவளது இடத்தில் இருக்கும் எந்த மனைவியும் அப்படித்தான் இருப்பார்கள். எந்த மனைவி தான் தன் கணவனை வேறொருத்தி அணைப்பதை பொறுத்துக் கொள்வாள்? சிறிது நாட்களுக்கு முன்பு தான், அவள் அவன் மீது எவ்வளவு காதல் கொண்டிருக்கிறாள் என்பதை மனம் திறந்து பேசினாள். அவள் மனதில் தேக்கி வைத்திருந்த, *தன் கணவன் தனக்கு மட்டும்* என்ற எண்ணத்தை, இன்று ராதா தூண்டிவிட்டு விட்டாள்.

இருவரும் வழிநெடுக அமைதியாய் இருந்தபடி இல்லம் வந்து சேர்ந்தார்கள்.

அவர்கள் வீட்டிற்குள் வந்தவுடன், அவள் கையை பிடித்து அவளை தன்னை நோக்கி திருப்பிய முகுந்தன்,

"மீரா, எதுக்காக என்கிட்ட பேச மாட்டேங்குற?" என்றான் இயலாமையுடன்.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now