29 தவறான கணிப்பு

900 67 15
                                    

29 தவறான கணிப்பு

மறுநாள் காலை

ஒன்றும் நடக்காதது போல அலுவலகத்திற்கு தயாரானாள் மீரா. அவளும் வைஷ்ணவியும் திட்டமிட்டது படி, நிச்சயதார்த்தத்திற்கு செல்ல தேவையான புடவையை தன் கையில் எடுத்து வைத்துக் கொண்டாள். நிச்சயத்திற்கு சென்று வந்தபின் அதைப்பற்றி முகுந்தனிடம் கூறிக் கொள்ளலாம் என்று எண்ணினாள் அவள்.

முழுவதும் தயாரான நிலையில், வெளியே வந்த முகுந்தன், மீராவுக்காக காத்திருந்தான். அவள் எப்பொழுதும் போல சாதாரண உடையில் வந்ததாள். இருவரும் ஒன்றாக அலுவலகம் வந்தார்கள்.

வழக்கம் போல தனது அறைக்குச் சென்றாள் மீரா. மீராவின் அறைக்கு வந்தான் நந்தகோபால்.

"ஹாய் மீரா... "

"ஹாய் நந்தா..."

"இப்போ நான் எப்படி ஃபீல் பண்றேன்னு கேளுங்களேன்" என்றான் ஆர்வத்துடன்.

"ஏதாவது ஸ்பெஷலா?"

"இந்த காதல் இருக்கே... அது ரொம்ப பரவசமான ஒரு உணர்வு. நான் அப்படிப்பட்ட பரவசத்தை அடைய, நீங்க காரணம இருந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்"

"மை பிளஷர்" என்று சிரித்தாள் மீரா.

தனது காரை பார்க் செய்துவிட்டு வந்த முகுந்தன், அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தான்.  நந்தகோபாலின் பரவச நிலைக்கு மீரா எப்படி காரணமானாள்? அதற்கு என்ன அர்த்தம்?

"காதல் என்னை இப்படி தூக்கம் இல்லாமல் செய்யும்னு நான் நினைச்சு கூட பார்த்ததில்ல. நேத்து ராத்திரி அதை நான் அனுபவிச்சேன்... உங்களால,"

மீரா புன்னகை புரிந்தாள்.

"என்னோட வாழ்க்கையை கலர்ஃபுல்லாவும் அர்த்தமுள்ளதாவும் மாத்தினதுக்கு ரொம்ப தேங்க்ஸ், மீரா"

"ஆரம்பத்துல எல்லாரும் இப்படித்தான் ரொம்ப ஆர்வமா இருப்பாங்க. ஆனா போகப் போக எல்லாரும் மாறிடுறாங்க. நீங்க அப்படி மாற மாட்டீங்கன்னு நான் நம்புறேன்"

"சத்தியமா மாற மாட்டேன், மீரா. என் காதல்ல நான் உறுதியா இருப்பேன். நீங்க என்னை நினைச்சி பெருமைப்படுவீங்க"

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now