8 நேர்முகத் தேர்வு

796 68 8
                                    

8 நேர்முகத் தேர்வு

சிற்றுண்டியை சாப்பிடாமல் காத்திருந்தாள் மீரா. முகுந்தன் என்ன செய்யப் போகிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும் அவளுக்கு. தனது அறைக்கச் சென்ற அவன், குளித்து முடித்துவிட்டு மீண்டும் வெளியே வந்தான். அவனுக்கு உடல்நிலை சற்று தேவலாம் என்று இருந்த போதிலும், முற்றிலும் தேரிவிட்டான் என்று கூறும்படி இல்லாமல் இருந்தது. இட்லியும், காரம் இல்லாத சாம்பாரும், உணவு மேசைக்கு எடுத்துக் கொண்டு வந்து, தொலைக்காட்சியில்  செய்தியை பார்த்தபடி  சாப்பிட துவங்கினான். சமையலறைக்கு பக்கத்தில் இருந்த அந்த அறையின் நுழைவு வாயிலை, அவன் கண்கள் அவ்வப்போது பார்த்தபடி இருந்தது. ஆனால், அந்த அறையில் தங்கி இருந்த அந்த நபர், அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. ஆனால், அவள் அங்கிருந்து அவனைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். சாப்பிட்டு முடித்துவிட்டு தன் அறைக்கு சென்றான் முகுந்தன்.

தேவைப்பட்டாலே ஒழிய தன் அறையை விட்டு வெளியே வரவில்லை மீரா. அன்று முழுவதும், தான் கலந்து கொள்ளவிருக்கும் நேர்முக தேர்வு பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள் மீரா. அவளுக்கு பதற்றமாக இருந்தது. ஏனென்றால் அவளை தேர்வு செய்ய இருப்பது, வேறு யாரும் அல்ல அவளது கணவன். அவளது இதயம் பயத்தில் ஏடாகூடமாய் துடித்தது. எப்படியும் இந்த வேலையை அவள் பெற்றாக வேண்டும். தன் கணவனுடன் 24*7 இருக்க முடியும் என்பது அவள் சிறிதும் எதிர்பாராதது... அவளுக்கு மறுபடியும் கிடைக்காததும் கூட. இந்த சந்தர்ப்பத்தை நிச்சயம் கைநழுவ விடக்கூடாது. அந்த நிறுவனத்தின் முதலாளி மிகுந்த எளிமையான மனிதராய் காணப்படுகிறார். புதியவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். எந்த முதலாளி இவ்வளவு பரந்த நோக்கத்துடன் இருப்பார்? எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு தமிழர். எல்லாமே அவளுக்கு சாதகமாய் இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை மட்டும் அவள் தவறவிட்டால், இந்த உலகத்திலேயே அவளைப் போன்ற அதிர்ஷ்டம் கெட்டவள் யாரும் இருக்க முடியாது. அவள் கேட்ட வழியை கடவுள் அவளுக்கு காட்டிவிட்டார். இந்த அரிய சந்தர்ப்பத்தை மட்டும் அவள் பயன்படுத்திக் கொண்டு விட்டால், அவள் நினைத்ததை நிச்சயம் அவள் சாதிக்க முடியும்.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now