24 நண்பர்களின் காதல்

773 66 9
                                    

24 நண்பர்களின் காதல்

முகுந்தன் ஆர்டர் செய்த உணவை சந்தோஷமாய் சாப்பிட்டாள் மீரா. ஜானகி சொன்னது சரி தான். முகுந்தனிடம் அவளால் நிறைய மாற்றங்களை காண முடிந்தது. அவனது நடவடிக்கைகள் ரொம்பவே மாறி இருந்தது. ஆரம்ப நாட்களில் அவனது கண்களில் இருந்த வெறுப்பு இப்போது இல்லை. ஆம் அவன் அதிகம் பேசக்கூடியவன் அல்ல. உண்மையை கூறப்போனால் அவன் பேசக்கூடியவனே அல்ல. எப்பொழுதும் தனியாக இருக்க விரும்பியவன். அவன் மாறி இருக்கிறான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இந்த மாற்றம் நிலையானதா? அவனுடைய மாற்றத்திற்கு என்ன காரணம்? அபராஜித் அவளிடம் தவறாய் நடக்க முற்பட்டான் என்பதற்காக அவன் கோபம் கொண்டான். ஆனால் இந்த உணர்வு அவனுக்கு எப்பொழுதும் இருக்குமா? ஒருவேளை சிறிது நாட்களில் இந்த உறவு அவனுக்கு சுமையாக தோன்றினால் என்னவாகும்? சரியாய் தெரியாத ஒன்றின் மீது நம்பிக்கை வைத்தல் நலம் பயக்குமா? ஒருவேளை அவன் நேர்மாறாய் மாறிவிட்டால், அந்த மாற்றத்தை அவளால் தாங்க முடியுமா? பெருமூச்சை இழுத்து விட்டாள் மீரா.

"எதுக்காக அவசரப்படுற மீரா? கொஞ்சம் பொறுத்து தான் பாரேன். உண்மையிலேயே அவரோட வாழ்க்கையில நீ வேணும்னு அவர் நினைக்கிறாரான்னு தெரிஞ்சுக்கோ. கடைசி வரைக்கும் அவர் உன்னை விட்டுட மாட்டார்னு நிச்சயப்படுத்திக்கோ. எப்பவும் உன்னை மும்பையை விட்டும், அவரோட வீட்டை விட்டும் போக சொல்ல மாட்டார்னு தெரிஞ்சுக்கோ. அவர்கிட்ட இருந்து திடமான உத்திரவாதம் கிடைக்கிற வரைக்கும் பொறுமையா இரு. அவர் உன் மேல காட்டுர அக்கறையை பார்த்து ஆடிப் போயிடாதே. உறுதியா இரு. அவர்கிட்ட இப்ப தெரியிறது நல்ல மாற்றம் தான், அதுல எந்த சந்தேகமும் இல்ல. அவர் இதை ஒரு கடமையா செய்றாரா, இல்ல காதலோட செய்றாரான்னு தெரிஞ்சுக்கோ. காதலுக்கும் கடமைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு மீரா. எந்த ஒரு அடியையும் எடுத்து வைக்கிறதுக்கு முன்னாடி அவரோட மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கோ" என்று அனைத்தையும் தனக்குத்தானே கூறிக் கொண்டாள் மீரா. நம்மை விட நம் பிரச்சினையைப் பற்றி நன்கு அறிந்தவர் வேறு யார் இருக்க முடியும்? அதனால் முகுந்தனின் நடவடிக்கைகளை கவனிப்பது என்று தீர்மானித்தாள் மீரா.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now