26 முகுந்தனின் செயல்

812 64 9
                                    

26 முகுந்தனின் செயல்

மீரா வானத்தில் பறந்து கொண்டிருந்தாள். முகுந்தன் அவளை சத்தம் போட்டான்... ஜெகதீஷிடம் பேசக்கூடாது என்று கூறினான்... அவளது சொந்த விஷயத்தில் எப்பொழுதும் தலையிடவே மாட்டேன் என்று கூறிய அவன், இன்று அவளது சொந்த விஷயத்தில் கோபமாய் தலையிட்டான். அவன் வகுத்து வைத்திருந்த சொந்த விதிகளை அவன் உடைக்க துவங்கி விட்டது நன்றாகவே தெரிந்தது. இதைவிட அவளுக்கு வேறு என்ன வேண்டும்? அவளுக்கு ஒரே ஒரு விஷயம் அவனிடமிருந்து தேவைப்பட்டது...! வாய்மொழி வார்த்தை...! *நான் உன்னை காதலிக்கிறேன்* என்ற அந்த மூன்று மந்திர வார்த்தைகள்...! அவளிடம் அவனால் சண்டை போட முடிகிறது என்றால்... அவளிடம் அவனால் கோபப்பட முடிகிறது என்றால்... அவளுக்கு உத்தரவிட முடிகிறது என்றால்... உன்னை காதலிக்கிறேன் என்று மட்டும் கூற முடியாதா? என்பது தான் அவளது கேள்வி. அவள் அப்படி நினைப்பது நியாயம் தானே? அவன் வாயை திறந்து அதை சொன்னால் தான் என்ன? அல்லது, அவனை அப்படி சொல்ல வைக்க அவள் முயற்சிக்க வேண்டுமா? நமக்கு பிடித்த நபரிடமிருந்து அந்த வார்த்தைகளை கேட்பது தான் எவ்வளவு பரவசம்...! அவனுக்கு அவள் வேண்டாம்  என்று அவன் கூறவில்லையா...? அப்படி என்றால் இப்பொழுது அவள் எதற்காக வேண்டும் என்று அவன் கூற வேண்டும். அவனுக்கு உண்மையிலேயே அவளை பிடித்திருந்தால், அதை அவன் சொல்லட்டும்...!

சமையலறைக்கு செல்வதற்காக தனது அறையை விட்டு வெளியே வந்தாள் மீரா. வரவேற்பறையில் அமர்ந்து, தனது மடிக்கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான் முகுந்தன். இது தான் முதல் முறை, அவன் வரவேற்பறையில் அமர்ந்து தனது பணியை செய்வது. அவனைப் பார்க்காதவள் போல, சமையலறை நோக்கி நடந்தாள் மீரா. அப்பொழுது முகுந்தனின் குரல், அவளை தடுத்து நிறுத்தியது.

"மீரா..."

முகத்தில் எந்த பாவத்தையும் காட்டாமல் அவனை நோக்கி திரும்பினாள் மீரா.

"எனக்கும் சேர்த்து டின்னர் ப்ரிப்பர் பண்ணு" அது நிச்சயம் வேண்டுதல் அல்ல, உத்தரவு தான்.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now