51 யார் அவள்?

703 51 4
                                    

51 யார் அவள்?

இரவு

அனைவருக்கும் உணவு பரிமாறினாள் மீரா.

"மீரா, நீ வந்து உட்காரு. நான் உனக்கு பரிமாறுறேன்" என்றார் ஜானகி.

"ஏன் மா?"

"உன்னால தான் இன்னைக்கு நம்ம எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்கோம். இப்படி ஒரு நாள் எங்க வாழ்க்கையில வரும்னு நான் நினைச்சே பார்த்ததில்ல தெரியுமா?"

"அதனால?"

"உன்னை நாங்க மதிக்கணும்"

"அம்மா, நான் இந்த வீட்டோட மருமக. நான் செஞ்சது எதுவும் இந்த குடும்பத்துக்காக செய்யல. எனக்காக தான் செஞ்சுகிட்டேன். நான் என்ன செஞ்சேனோ அதை நம்பிக்கையோட செஞ்சேன். அவ்வளவு தான் அதுக்கு மேல நான் எதுவும் செய்யலையே"

"ஆமாம்... நீ நீயாவே இருந்து எங்க பிள்ளையோட மனசை கொள்ளை அடிச்சுட்ட... அதுவே ஒரு பெரிய சாதனை தான்" என்றார் கேசவன்.

"எது எப்படியோ, அவன் உன்னால தான் மாறினான்" என்றார் ஜானகி.

"அவர் ரொம்ப நல்லவருமா. இயல்பாவே அவர் நல்லவரா இருந்ததால தான் அவரால மாறமுடிஞ்சது. இல்லன்னா அவர் மாறனும்னு நினைச்சி இருக்க மாட்டாரு" என்று தன் கணவனின் பக்கம் நின்றாள் மீரா. அது அவளது மாமனார் மாமியாரையும் கூட பெருமை கொள்ள செய்தது.

சிரித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் முகுந்தன்.

"அவன் மாறணும்னு நினைச்சது மட்டும் அவன் மாற்றத்துக்கு காரணம் இல்ல... அவன் உன்னை ரொம்ப நேசிக்கிறான். அதனால தான் அவன் மாறணும்னு நினைச்சிருக்கான்"

மீரா சிரித்தபடி முகுந்தனை பார்க்க, அவன் ஆம் என்று தலையசைத்தான்.

"எல்லா புகழும் அவருக்கு தான். அவர் மாறணும்னு நினைச்சதால தான் மாறினாரு"

"அப்படியா மகனே?"

"நான் மீராவுக்காக மாறணும்னு நெனச்சேன். அவ மட்டும் என் வாழ்க்கையில வராம இருந்திருந்தா, நான் மாற்றத்தை பத்தி எல்லாம் யோசிச்சிக்கூட இருக்க மாட்டேன்"

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now