54 உடைந்த மூக்கு

613 45 4
                                    

54 உடைந்த மூக்கு

மறுநாள்

மனோகரை பார்ப்பதற்கு மருத்துவமனைக்கு செல்ல தயாரானான் முகுந்தன்.

"ஏங்க, என்னை ஹாஸ்பிடல் பக்கத்துல இருக்குற கோவில்ல விட்டுட்டு நீங்க போங்க. நான் சாமி கும்பிட்டுட்டு உங்களுக்காக வெயிட் பண்றேன். நீங்க வந்து என்னை பிக்கப் பண்ணிக்கோங்க"

"ஓகே"

அவர்கள் இருவரும், கேசவன் மற்றும் ஜானகியுடன் காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டார்கள்.

"நானும் உன் கூட வரட்டுமா முகுந்தா?" என்ற கேசவன்.

"எதுக்குப்பா?"

"மனோகரும், அவங்க குடும்பமும் என்ன மனநிலையில இருக்காங்கன்னு தெரியலயே" என்றார் எச்சரிக்கை உணர்வுடன்.

"நான் பார்த்துக்கிறேன் பா"

"நிஜமா தான் சொல்றியா?"

"ஆமாம்..."

"நீ மீராவை உன்கூட கூட்டிட்டு போற. அவங்க உன் கிட்ட ரூடா நடந்துக்கிட்டா என்ன பண்ணுவ?"

"அவ ஹாஸ்பிடலுக்கு வரல. பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போறா"

"அப்படியா மீரா?"

"ஆமாம் மா"

"அப்படின்னா, நீ ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். ஆனா, நீ எதுக்காக மீராவை கோவிலில் விட்டுட்டு போற? அவளையும் உன்னோட கூட்டிக்கிட்டு போ. இல்லன்னா, என்னை உன் கூட வர விடு. நான் மீராவை பார்த்துக்கிறேன்" என்றார் கேசவன்.

"எதுக்காக பா மனோகரை பார்த்து இப்படி பயப்படுறீங்க?"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. ஒன்னு நான் வரேன், அப்படி இல்லன்னா, ஜனார்த்தனன் சாருக்கு ஃபோன் பண்ணி வர சொல்லலாம். மீராவை அவர் பாத்துக்குவாரு"

"எதுக்குங்க நீங்க அண்ணனை டென்ஷன் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? நான் வேணா மீராவோட போறேன்" என்றார் ஜானகி.

"அம்மா, நீங்க ரெண்டு பேரும் வர வேண்டாம். நான் மீராவோட கோவிலுக்கு போயிட்டு, அதுக்கப்புறம் ஹாஸ்பிடல் போறேன். போதுமா?"

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now