12 கேள்வி

747 66 8
                                    

12 கேள்வி

"உண்மையிலேயே அவர் கல்யாணம் ஆனவரான்னு தெரிஞ்சுக்கிட்டு வந்து எனக்கு கொஞ்சம் சொல்ல முடியுமா?" என்று கெஞ்சினாள் ஸ்ரேயா.

சரி என்று தலையசைத்தாள் மீரா.

"நான் சொல்றதை நீ கேக்க மாட்டியா ஸ்ரேயா?" என்று அவளை கடிந்து கொண்டாள் வைஷ்ணவி.

ஸ்ரேயாவின் முகம் வதங்கி போனது.

"இதைப் பத்தி நீங்கள் என்ன நினைக்கிறீங்க மீரா?" என்றாள் வைஷ்ணவி.

அதை எதிர்பார்க்காத மீரா திகைத்தாள். அவள் என்ன கூற முடியும், என் கணவனை காதலிக்காதே என்றா?

"இதுல நான் என்ன சொல்ல முடியும்? இது அவங்களோட பர்சனல் மேட்டர்"

"இல்ல, இல்ல, அப்படி யோசிக்காதீங்க மீரா. நீங்க இந்த இடத்துக்கு புதுசு. உங்களுக்கு என்னை பத்தி எதுவும் தெரியாது. அதனால நீங்க சொல்றது நடுநிலமையா தான் இருக்கும்" என்றாள் ஸ்ரேயா.

அவளது அணுகுமுறை மீராவுக்கு பிடித்திருந்தது.

"ஒருவேளை, அவர் கல்யாணம் ஆனவரா இருந்தா, நீங்க என்ன செய்வீங்க?" என்று கேள்வி எழுப்பினாள் மீரா.

பெருமூச்சு விட்ட ஸ்ரேயா,

"என்ன செய்ய முடியும்? அவர் வாழ்க்கையை விட்டு ஒதுங்கி தான் ஆகணும்" என்றாள் சோகமாய்.

"அப்படின்னா, அதை செய்யுங்க. அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு நினைச்சுக்கோங்க"

"ஒருவேளை, அவருக்கு கல்யாணம் ஆகாம இருந்தா?"

"தனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு பொய் சொல்லியாவது உங்களை தன் கிட்ட இருந்து விலக்கி வைக்கணும்னு நினைக்கிற ஒருத்தர் கிட்டயிருந்து நீங்க என்ன சாதிக்க முடியும்னு நினைக்கிறீங்க?"

"அவங்க சொல்றது சரி தான், ஸ்ரேயா" என்றாள் வைஷ்ணவி.

"இந்த ஆஃபீஸ்ல வேற யாருக்கும் அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு தெரியாதா?" என்றாள் மீரா.

"நந்தாவுக்கும் ஜெகதீஷுக்கும் தெரியும்"

"அப்படியா?"

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now