9 பதில்

769 56 6
                                    

9 பதில்

முகுந்தனை பார்த்த மீரா தன் முகத்தில் லேசான அதிர்ச்சி காட்டினாள், அவனை மடக்கிப் பிடிக்க, அவள் திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறாள் என்று அவன் எண்ண வேண்டாம் என்பதற்காக. உண்மையைக் கூறப் போனால், அவள் திட்டம் வகுத்திருக்கிறாள் தான்...! ஆனால்  அதை அவனுக்கு ஏன் அவள் தெரியப்படுத்த வேண்டும்? அவளது புதிய அவதாரத்தை கண்ட முகுந்தன் திகைப்பில் திளைத்தான். அவளது முகத்தில் வெட்டி மறைந்த அதிர்ச்சி, இது அவன் பணிபுரியும் நிறுவனம் என்பது மீராவுக்கு தெரியாது என்று அவனை நம்ப வைத்தது. தன் மனைவி தன் முன்னால் நின்று கொண்டிருக்கிறாள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. அவள் தன்னை சமாளித்துக் கொள்வதை அவன் கவனித்தான்.

"குட் மார்னிங் சார்" என்றாள் வாசுதேவனை பார்த்தவாறு. புன்னகையுடன் தலையசைத்த அவன்,

"டேக் யுவர் சீட், *மிஸ்* மீரா" என்றான்.

அவர்களுக்கு முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் மீரா. அவள் வாசுதேவனிடம், நான் *மிஸ்* அல்ல *மிஸஸ்* என்று கூறுவாள் என்று எதிர்பார்த்தான் முகுந்தன். ஆனால் அவள் அப்படி கூறவில்லை. அப்பொழுது தான் அவளது கழுத்தை அவன் கவனித்தான். அவளது கழுத்தில் தாலி இருக்கவில்லை. தன்னை அறியாமல் தன் பல்லை கடித்தான் அவன்.

"சொல்லுங்க, மிஸ் மீரா, இந்த வேலையை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று அனைவரிடமும் கேட்ட அதே கேள்வியை அவளிடமும் கேட்டான் வாசுதேவன்.

இது தான் அந்த கேள்வியா? அதற்கு, தைரியமாகவும், வித்தியாசமாகவும் பதில் அளிக்க தயாரானாள் மீரா, சில வினாடிகளை எடுத்துக்கொண்டு.

"கல்யாணமே பண்ணிக்காம, *மாப்பிள்ளையை* பத்தி எப்படி சார் சொல்ல முடியும்?" என்று பதில் கேள்வி கேட்டாள்.

தன் விழிகளை விரித்து அவளை ஏறிட்டான் முகுந்தன். வாசுதேவனோ ஆர்வமானான்.

"மாப்பிள்ளையா? நீங்க எதைப் பத்தி பேசுறீங்க?" என்றான் வாசுதேவன் நிமிர்ந்து அமர்ந்து.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now