66 தண்டனை

621 55 5
                                    

66 தண்டனை

ராதாவின் வீட்டில் மீராவை கண்ட முகுந்தன் திகைத்தான். அவன் வாசுதேவனை மட்டும் தான் அங்கு வரச்சொல்லி அழைத்திருந்தான். அப்படி இருக்க, மீரா எப்படி அங்கே வந்தாள்?

ராதா பின்னோக்கி நகர்வதை உணர்ந்த முகுந்தன், அவளை நோக்கி தன் பார்வையை திருப்பினான். அவனது கோப பார்வையை பார்த்த அவள், நடுக்கமுற்றாள்.

"என்னை உன் கைக்குள்ள போட்டுக்க முடியும்னு நினைச்சியா?" என்றான். அவனது எரிமலை கோபத்தை பார்த்த அவள், பயத்தோடு பின்னோக்கி நகர்ந்தாள்.

"உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, என்னை உன் வீட்டுக்கு வர சொல்லி கூப்பிடுவ? இங்க என்னை வர சொன்னதுக்காக, உன் வாழ்நாள் முழுக்க நீ வருத்தப்பட போற..."

கோபாலையும், ஜலஜாவையும் பார்த்தாள் ராதா, அவர்களிடமிருந்து ஏதாவது உதவி கிடைக்காதா என்று. கோவர்தனின் பிடியில் அகப்பட்டு கிடந்தான் கோபால். ஜலஜாவோ வெடவெடத்து கிடந்தாள். அவர்கள் எங்கே அவளுக்கு உதவுவது?

"அண்ணா..." என்று ராதா அழைத்தது தான் தாமதம், அவள் கழுத்தை இறுக்கி பிடித்தான் முகிலன், தன் பல்லை கடித்த படி.

"ஒரு மகத்துவமான உறவை மறுபடியும் கொச்சைப்படுத்த நினைச்சே... உன்னை கொன்னுடுவேன்" என்றான்.

அப்பொழுது அவசரமாய் அந்த வீட்டிற்குள் நுழைந்தான் வாசுதேவன். அவனும் அங்கிருந்த மீராவை பார்த்து திகைப்புற்றான்.

"மீரா, நீங்க எங்க வந்தீங்க?"

"நீங்க இங்க எப்படி வந்தீங்க வாசு?" என்று அதே கேள்வியை கேட்டாள் மீரா.

"முகுந்தன் தான் வர சொன்னான். ராதா ஃபோன் பண்ண விஷயத்தையும், நீங்க அவனை கட்டாயப்படுத்தி அனுப்புன விஷயத்தையும் சொன்னான்"

"இவளுங்களை கையும் களவுமா பிடிக்கத்தான் அவரை போகச் சொன்னேன். அவர் இங்க வந்தா மட்டும் தான் அது நடக்கும். இல்லன்னா, இவ தன்னை ரொம்ப உத்தமி மாதிரி காட்டிக்கிட்டு வேஷம் போட்டுக்கிட்டு திரிஞ்சிக்கிட்டு இருப்பா. அதனால தான், அவரை போக சொல்லி நான் கட்டாயப்படுத்தினேன்"

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now