30 தாம்பத்தியம்

1K 70 20
                                    

30 தாம்பத்தியம்

மீரா அணிந்திருந்த துண்டு நழுவி கீழே விழுந்ததை முகுந்தன் கவனிக்கவில்லை. அவன் கவனித்தே இருந்தாலும் கூட, அதைப்பற்றி அவன் கவலைப்பட்டிருப்பான் என்று நாம் கூறுவதற்கு இல்லை.

தன் அறைக்கு அவளை தூக்கி வந்து தன் கட்டிலில் கிடத்தினான். அவளை எழுப்புவதற்காக அவளது தோள்களை பற்ற நீண்ட அவனது கரம், அவள் அணிந்திருந்த துண்டு இல்லாததைக் கண்டு அப்படியே நின்றது. அப்பொழுது தான் அவனுக்கு *பாலியல் ரீதியான* ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அது, அவன் ஒரு *ஆண்மகன்* என்பது. இதுவரை எந்த ஒரு பாலியல் உணர்வுக்கும் ஆடப்படாத அவனுக்கு, மீராவின் *பெண்மை* அதை நினைவூட்டியது.

தன் பார்வையை வேறு பக்கம் திருப்ப முடியாமல் திக்கு முக்காடினான் முகுந்தன். அவனது கண்களில் மினுமினுத்தாள் மீரா. *காணாததை கண்ட*  அவனுக்குள் ஏதேதோ புதிதாய் நிகழ்வதை உணர்ந்தான் அவன். இதுவரை, அவனுக்குள் இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியாமல் இருந்த அவனது பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்கள், *உள்ளேன் ஐயா* என்று கை உயர்த்தி, தங்கள் இருப்பை பதிவு செய்தன. கோவில் சிலை போல் இருந்த மீரா, அவனது நரம்புகளை முறுக்கேற செய்தாள்.

அவளைத் தொட துடித்த  தன் கை விரல்களை மடக்கி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான் முகுந்தன். சுயநினைவு இல்லாத தன் மனைவியை தொட அவன் விரும்பவில்லை. அதற்காக அவன் அவளை தொடப்போவதில்லை என்று அர்த்தம் இல்லை. அவளைத் தொட வேண்டும், அவள் கண் விழி பிறகு...! அவள் சுயநினைவின்றி இருக்கும் பொழுது எதற்காக அவளை தொட வேண்டும்? அவள் அவனது மனைவி. அவளைத் தொடும் அனைத்து உரிமையும் அவனுக்கு இருக்கிறது...! அவனால் உரிமையுடன் அவளை தொட முடியும்... அவன் தொடுவான்...!

அவனது மூளை பரபரவென வேலை செய்தது. அவர்கள் இருவரும் இணைந்து *ஒன்றானால்* அவனை விட்டு பிரிந்து செல்லும் எண்ணம் அவளுக்கு எழாது. தன்னை விட்டு விலகிச் செல்லாமல் அவளை தடுத்தாக வேண்டும். அதை செய்ய இது தான் சிறந்த உபாயம் என்று எண்ணினான் முகுந்தன்.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now