இறுதிப் பகுதி

717 64 16
                                    

இறுதிப் பகுதி

அது மீராவுக்கு ஐந்தாவது மாதம். அந்த புகழ்பெற்ற மருத்துவமனையின் ஸ்கேனிங் அறையின் வெளியே மீராவுக்காக காத்திருந்தான் முகுந்தன். அவன் சிறிது பதற்றத்துடன் காணப்பட்டான். அவனது பதற்றம், குழந்தையின் வளர்ச்சி குறித்தது. மீரா ஆரோக்கியமாகத்தான் இருந்தாள் என்றாலும், ஸ்கேனிங் ரிப்போர்ட் வந்த பிறகு தான் அவனுக்கு முழு நிம்மதி கிடைக்கும்.

மீரா ஸ்கேனிங் அறையிலிருந்து வாடிய முகத்துடன் வெளியே வருவதை கண்ட அவனது பதற்றம் அதிகரித்தது.

"என்ன ஆச்சு மீரா? ஒன்னும் பிரச்சனை இல்லையே? எல்லாம் நல்லா தானே இருக்கு?" என்றான்.

ஆமாம் என்று தலையசைத்தாள் மீரா.

"அப்புறம் எதுக்கு சோகமா இருக்க?"

"உங்களோட விருப்பம் நிறைவேற போறதில்லன்னு நெனச்சா வருத்தமா இருக்கு" என்றாள் வருத்தம் தோய்ந்த முகத்துடன்.

"நீ என்ன சொல்ற?" என்றான் யோசனையுடன்.

"ஆமாம். உங்களோட திட்டம் பலிக்கப்போறதில்ல..." என்று பெருமூச்சு விட்டாள்.

"ஆனா, ஒன்னும் பிரச்சனை இல்லன்னு சொன்னியே... குழந்தை நல்லா தானே இருக்கு?"

"ஆமாம் அவங்க நல்லா தான் இருக்காங்க"

"அவங்களா? அப்படின்னா பொறக்க போறது ட்வின்ஸா?" என்றான் ஆர்வத்துடன்.

இல்லை என்று கவலையோடு தலையசைத்தள்.

"அப்படின்னா மூணு குழந்தையா?"

அதற்கும் இல்லை என்று தலையசைத்தாள்.

"அப்படின்னா என்ன விஷயம்னு சொல்லு மீரா"

"அவங்க பஞ்சபாண்டவர்கள்"

"என்ன்னனது?" என்று, அது மருத்துவமனை என்பதை மறந்து, குரல் உயர்த்தினான் முகுந்தன்.

"ஆமாம்" என்று ஐந்து விரல்களை காட்டி, சோகமாய் தலையசைத்தாள் மீரா. முகுந்தனின் முகத்தில் கிலி படர்ந்தது. ஐந்து குழந்தைகளா...!

🎉 You've finished reading தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) 🎉
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now