3 இது தான் நான்

877 65 5
                                    

3 இது தான் நான்

மறுநாள் விடியற் காலை

முகுந்தனும் மீராவும்   பறக்க தயாரானார்கள். தன்னை வழி அனுப்ப வந்த பெற்றோரிடமும், மாமனார் மாமியாரிடமும் ஆசீர்வாதம் பெற்றாள் மீரா.

இருவரும் விமானத்தில் சென்று அமர்ந்தார்கள். முகுந்தனுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த போதும், அவனிடமிருந்து விலகியே இருந்தாள் மீரா. தேவையில்லாமல் அவனை எரிச்சல் அடைய செய்ய அவள் விரும்பவில்லை. தனது இருக்கையில் சாய்ந்தமர்ந்து, கண்களை மூடி கொண்டாள். எனினும் அவள் தூங்கவில்லை. ஆனால் முகுந்தன் உறங்கிப் போனான்.

இரண்டு மணி நேர வான் பயணத்திற்கு பிறகு, தன் கணவனுடன் மும்பை மண்ணில் காலடி எடுத்து வைத்தாள் மீரா. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து, ஒரு டாக்ஸியை அமர்த்திக் கொண்டு, தான் வசிக்கும் *கிளவுட் நைன்* அப்பார்ட்மெண்ட்டை வந்தடைந்தான் முகுந்தன். அந்த அடுக்குமாடி குடியிருப்பு, ஏற்புடையதாகவும், பண்பார்ந்ததாகவும் இருந்தது.

மீராவுடன் தன் இல்லம் வந்த முகுந்தன், கதவை திறந்தான். அவனது வீடு சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது, மீராவுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அந்த வீட்டில், இடப்புறமாக, சமையல் அறைக்கு பக்கத்தில் இருந்த ஒரு அறையை சுட்டிக்காட்டி,

"அது தான் உன்னோட ரூம்" என்று கூறிவிட்டு, வாசலுக்கு நேர் எதிரில் இருந்த மற்றொரு அறைக்கு சென்று, அதன் கதவை சாத்தி தாளிட்டுக் கொண்டான் முகுந்தன்.

அவன் கூறிய வார்த்தைகளை மறுபடியும் தன் மனதிற்குள் ஓட விட்டாள் மீரா.

*உனது அறையா?* அதற்கு என்ன அர்த்தம்? அவர்கள் தனித்தனியாகவா வசிக்கப் போகிறார்கள்? தனித்தனி அறையில் தங்க நேர்ந்தால், அவனுடைய கவனத்தை எப்படி அவள் பக்கம் திருப்புவாள்? அவளுடைய தலையெழுத்தில் எழுதி இருப்பது இது தானா? என்ன வாழ்க்கை இது? அவளால் அதை சுலபமாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும் கணவன் மனைவி. ஆனால் முகுந்தனோ, அவள் தனியாக வேறு அறையில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான்.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now