62 சந்தேகம்

660 49 7
                                    

62 சந்தேகம்

மீரா ஏன் கலவரத்துடன் காணப்பட்டாள் என்று புரியவில்லை முகுந்தனுக்கு. அவள் சதா ராதாவை பற்றியும், அவள் பேசிய வார்த்தைகளை பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தாள். வெளிப்பார்வைக்கு அவள் அமைதியாய் காணப்பட்ட போதிலும், அவள் மனதில் புயல் அடித்துக் கொண்டிருந்தது. இந்த விஷயத்தை எப்படி கையாள்வது என்றும், ராதாவை என்ன செய்வதென்றும் புரியவில்லை அவளுக்கு.

சமையலறையில்

அடுப்பில் இருந்த குழம்பை கிளறியபடி இருந்தாள் மீரா. ஆனால் அவளது மனம் அங்கு இல்லை. பக்கத்து அடுப்பில் இருந்த பால் பொங்குவதை அவள் கவனிக்கவில்லை. அங்கு வந்த முகுந்தன், அதை கவனித்து ஓடிச் சென்று அடுப்பை அணைத்தான். அவனை கலக்கத்துடன் பார்த்தாள் மீரா.

"மீரா, உனக்கு என்ன ஆச்சு? எதுக்காக இப்படி எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க?" என்றான் முகுந்தன்.

ஒன்றுமில்லை என்று தலையசைத்துவிட்டு, அடுப்பிலிருந்த குழம்பின் மீது தன் கவனத்தை செலுத்தினாள் மீரா. அடுப்பை அணைத்துவிட்டு அவளை தன்னை நோக்கி திருப்பி, தன்னை பார்க்கச் செய்தான் முகுந்தன்.

"ஏன் இப்படி டல்லா இருக்க?" என்ன ஆச்சு உனக்கு?"

"அதை விடுங்க" என்றாள் சலிப்புடன்.

"ஏன் விடனும்?" என்றான் அவள் கரங்களைப் பற்றியவாறு.

"நான் விஷயத்தை சொன்னா நீங்க என்னை நம்ப மாட்டீங்க" என்றபடி அவன் கரத்தை தன் கையிலிருந்து விடுவித்தாள்.

"உன்னை நான் நம்பலன்னா, வேற யாரை நம்ப போறேன்?" என்று மேலும் அவளை இறுக்கமாய் பற்றினான்.

அவனது முகத்தை படித்த அவள், இல்லை என்று தலையசைத்தாள்.

"மீரா, என்னமோ பிரச்சனை இருக்கு. என்னன்னு என்கிட்ட சொல்லு"

அவனது கோபம் அதிகமாவதை உணர்ந்தாள் அவள்.

"ராதா அவ ஃபிரண்டுகிட்ட ஃபோன்ல பேசிக்கிட்டு இருந்ததை நான் கேட்டேன்"

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now