33 என் மனைவி

884 63 8
                                    

33  என் மனைவி

முகுந்தனை திகைப்புடன் பார்த்து நின்றாள் மீரா. தான் காண்பது கனவில்லை என்று அவளால் நம்பவே முடியவில்லை. அவளை தன் மனைவி என்று கூறி, அவர்களது திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கி விட்டான் முகுந்தன். அவன் அதை கோபத்தில் தான் கூறினான் என்றாலும், அவளுக்கு அது ஆனந்த பரவசத்தை தந்தது.

ஜெகதீஷும் நந்தகோபாலும் கூட திகைத்துப் போனார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள். ஆனால் அவர்களை சுற்றி இருந்த மற்றவர்கள் தங்களுக்குள் கிசுகிசுக்க துவங்கினார்கள்.

"முகுந்தன்  சொல்றது உண்மையா மீரா?" என்றான் ஜெகதீஷ் அவனுக்கு ஒன்றும் தெரியாது என்பது போலவும், முகுந்தன் கூறியது அவனுக்கு அதிர்ச்சி அளித்தது போலவும்.

முகுந்தன் அளித்த இன்ப அதிர்ச்சியில் இருந்து வெளியே வராத மீரா, பதில் கூறாமல் நின்றாள்.

"அவனுக்கு பதில் சொல்லு" என்று உரத்த குரலில் கூறி அவளை திடுக்கிடச் செய்தான் முகுந்தன்.

அப்பொழுது அங்கு வந்தான் வாசுதேவன்,

"இங்க என்ன பிரச்சனை?" என்றான்.

தன்னை சமாளித்துக் கொண்ட மீரா, தன் சுற்றுப்புறத்தில் கண்களை ஓட விட்டாள். அவள் அமைதியாய் நிற்பதை பார்த்து, அவளை முறைத்தான் முகுந்தன். முகத்தில் எந்த பாவமும் இன்றி சிலை போல் நின்றிருந்த தன் அலுவலர்களை பார்த்த வாசுதேவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்ன ஆச்சு முகுந்தன்?" என்றான்.

"நான் என் வைஃப் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசிக்கிட்டு இருந்தேன்" என்றான் மீராவை பார்த்தபடி.

இப்போது வாசுதேவன் சிலையாய் போனான். இவ்வளவு சீக்கிரம் தன் திருமணத்தை அவன் வெளிப்படுத்துவான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. முகுந்தனுக்கு என்ன ஆகிவிட்டது? எதற்காக திடீரென்று தன் திருமணத்தை பற்றிய உண்மையை வெளியிட்டான்? எதற்காக இவ்வளவு கோபமாய் இருக்கிறான்? தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்ட அவன்,

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now