70 முகுந்தனின் திட்டம்

640 52 5
                                    

70 முகுந்தனின் திட்டம்

கதவை சாத்தி தாளிட்ட முகுந்தன், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தான். அவனுக்கு பக்கத்தில் அமர்ந்த மீரா, அவன் தோளை தொட்டு,

"ஏன் இப்படி இருக்கீங்க?" என்றாள்.

*உனக்கு தெரியாதா?* என்பது போல் அவளை பார்த்தான் முகுந்தன்.

"கொஞ்ச நாள் அவங்க இங்க இருக்கட்டும். அதுக்கப்புறம் நம்ம பேசி அவங்களை அனுப்பி வைக்கலாம்"

பதில் கூறாமல் அமைதியாய் படுத்துக் கொண்டான் அவன்.

"நீங்க எப்படித்தான் நம்ம பிள்ளையை வளர்த்து ஆளாக்க போறீங்கன்னு தெரியல. அவன் கிட்ட கூட இப்படித்தான் சண்டை போட போறீங்களா?" என்றாள்.

அவளுக்கு பதில் கூறாமல், அவளை அணைத்துக் கொண்டான், ஆனால் எச்சரிக்கையாக...!

"அப்செட்டா இருக்காதீங்க"

"நான் ஒன்னும் அப்செட்டா இல்ல. ஆனா என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்"

"என்ன செய்யப் போறீங்க?"

"பொறுத்திருந்து பாரு"

"அவங்க மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் செய்யாதீங்க"

"ட்ரை பண்றேன்"

அவன் என்ன செய்யப் போகிறான் என்று புரியவில்லை அவளுக்கு. அதைப் பற்றி யோசித்தபடி, அவனை அணைத்துக் கொண்டு உறங்கிப் போனாள் மீரா.

மறுநாள் காலை

சீக்கிரம் எழுந்த முகுந்தன், முகம், கை, கால் கழுவிக்கொண்டு சமையலறைக்கு சென்றான். வரவேற்பறையில் இருந்த சோபாவில், கேசவனும், ஜனார்தனனும்  படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை கண்டான். அவனுக்கும் மீராவுக்கும் காப்பி கலந்து எடுத்துக்கொண்டு, சமையலறையை விட்டு அவன் வெளியே வந்த போது,  விருந்தினர் அறையில் இருந்து வெளியே வந்தார் வைதேகி.

"என்னை எழுப்பி இருக்கலாம் இல்ல மாப்பிள்ள?" என்றார்.

"பரவாயில்ல அத்தை, இது ஒன்னும் எனக்கு புதுசு இல்லையே... அது உங்களுக்கும் தெரியும் தானே?" புன்னகையுடன் அங்கிருந்து நடந்தான் முகுந்தன்.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now