15 முகுந்தனன் கோபம்

759 65 6
                                    

15 முகுந்தனின் கோபம்

ஜானகியிடம் பேசினாள் மீரா.

"சொல்லுங்க அத்தை"

"நீ முகுந்தன் கூட அவனுடைய ரூம்ல தங்கறது இல்லையா?"

அவருக்கு எப்படி தெரிந்தது என்று எண்ணிய மீரா,

"ஏன் அத்தை அப்படி கேக்குறீங்க? நான் கிச்சன்ல வேலை செஞ்சுகிட்டு இருந்தேன்" என்று ஜானகியிடம் பொய் கூறாமல் மழுப்பினாள் மீரா.

"ஒரு மோசமான உண்மையை, அழகான பொய்யால மூடி மறைக்க நினைக்காத மீரா. எனக்கு என் பிள்ளையைப் பத்தி நல்லா தெரியும்" என்று கூறி, மீராவை சங்கடத்தில் ஆழ்த்தினார் ஜானகி.

"நான் அவர் வீட்ல இருக்கேன். எனக்கு அது போதும். நான் சந்தோஷமா இருக்கேன் அத்தை" தனது வருத்தத்தை காட்டிக் கொள்ளாமல் தவிர்த்தாள் அவள்.

"எவ்வளவு நாளைக்கு?"

"அவர் என்னை ஏத்துக்குற வரைக்கும்"

"அப்படி நடக்கும்னு எனக்கு தோணல" என்றார் சலிப்புடன்.

"எது நடக்காதுன்னு சொல்றீங்க?"

"நான் சொல்றதை கேளு மீரா, உன் மனசுக்கு பிடிச்ச வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ. முகுந்தனை விட்டுடு" என்றார் அதிருப்தியுடன்.

மீராவுக்கு தூக்கி வாரி போட்டது. இப்பொழுது என்ன நடந்து விட்டது என்று இவ்வளவு விரக்தியுடன் பேசுகிறார் ஜானகி? காலையில் கூட சந்தோஷமாக தானே பேசினார்? தன்னை சமாளித்துக் கொண்ட மீரா,

"மிகச்சிறந்த மாமியாருக்கான விருதை பெறுகிறார் திருமதி ஜானகி கேசவன்" என்று சிரித்து அவரை திசை திருப்ப முயன்றாள்.

"இது விளையாட்டு இல்ல மீரா" ஜானகியின் குரல் கண்டிப்புடன் ஒலித்தது.

"நானும் விளையாடல அத்தை. உங்க பிள்ளையை விட்டுட்டு நீங்க எனக்காக பேசுறீங்க இல்லையா, நான் அதை நினைச்சு ரொம்ப சந்தோஷப்படுறேன். ஆனா, இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கோன்னு மட்டும் சொல்லாதீங்க. அது நிச்சயம் நடக்காது. நான் அவரை ரொம்ப நேசிக்கிறேன்" என்றாள் சீரியஸாக.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now