2 இழுபறி ஆட்டம்

1K 63 6
                                    

2 இழுபறி ஆட்டம்

முகுந்தன் தனது பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருப்பதை கண்ட மீராவால் அவனைப் போல் இருக்க முடியவில்லை. அவனைப் போல் இருக்க அவள் விரும்பவுமில்லை.

"நானும் என்னோட ட்ரெஸ்ஸை பேக் பண்ணட்டுமா?" என்றாள்.

தான் செய்த வேலையை நிறுத்திவிட்டு அவளை ஏறிட்டான் முகுந்தன். அவளுக்கு என்ன பதில் கூறுவது என்று அவனுக்கு தெரியவில்லை. அவன் அம்மாவால் தான் அவளை அவன் மணந்து கொள்ள நேர்ந்தது என்ற சாக்கை சொல்லி, அவளை இங்கு விட்டு அவனால் மும்பை தப்பிச் செல்ல இயலாது.

"நீ மும்பைக்கு வந்து என்ன செய்யப் போற?" என்றான்.

"எல்லா ஒய்ஃபும் என்ன செய்வாங்களோ அதை நானும் செய்வேன்"

"ஆனா எல்லா புருஷங்களையும் மாதிரி நான் இருக்க மாட்டேன்"

"ஆமாம், எல்லாரும் ஒரே மாதிரி இருக்க முடியாது தான்"

"இங்க பாரு பொண்ணு..."

"மீரா... மிஸஸ் மீரா முகுந்தன்..."

திகைத்துப் போனான் முகுந்தன். இதன் மூலம் அவள் அவனுக்கு உணர்த்த விரும்புவது என்ன? அவள் அவனது மனைவி என்பதை இடித்துக் கூறுகிறாளோ?

"நீ மும்பைக்கு வந்தா உனக்கு ரொம்ப போரடிக்கும். நான் தினமும் வீட்டுக்கு வர ரொம்ப லேட் ஆகும்" சிறுபிள்ளைத்தனமான காரணம் கூறினான் முகுந்தன்.

"எவ்வளவு லேட் ஆனாலும் நீங்க வீட்டுக்கு தானே வருவீங்க?"

மறுபடியும் திகைத்தான் முகுந்தன்.

"எனக்கு... எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு" என்றாள் வெளிப்படையாக.

அவளை ஒரு விசித்திர ஜந்து போல் பார்த்தான் அவன்.

"என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்னு என்னை உனக்கு பிடிக்கும்னு சொல்ற?" தாங்க முடியாமல் கேட்டே விட்டான் அவன்.

"உங்களைப் பத்தி எல்லாம் தெரிஞ்ச பிறகு தான் உங்களை பிடிக்கணும்னு அவசியமில்ல. உங்க போட்டோவை பார்த்த உடனேயே எனக்கு உங்களை பிடிச்சிருச்சி" அழகாய் புன்னகைத்தாள் அவள்.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now