21 தெளிவு

898 67 9
                                    

21 தெளிவு

மீராவை தன்னுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் வெற்றி கண்டான் முகுந்தன். அவள் அவனுடன் அமர்ந்து இருக்காவிட்டாலும், அவனது தேவைகளை கவனிக்க அவள் தவறவில்லை. அடிக்கடி வரவேற்பறைக்கு வந்து அவன் நன்றாக இருக்கிறானா என்பதை கவனித்த வண்ணம் இருந்தாள் அவள்.  மாலை சிற்றுண்டியை குறைந்த அளவு உப்போடு சமைத்துக் கொடுத்தாள். தனக்கு யாரும் வேண்டாம் என்று இருந்த அவன்,  வெகுவாய் ஈர்க்கப்பட்டான்... தன் மனைவியால்... அவளது கவனிப்பால்... இதற்கு முன் தான் எப்போதும் அனுபவித்திராத வாழ்க்கையால்...!

அவள் எப்பொழுதெல்லாம் வரவேற்பறையை கடந்து சென்றாளோ, அப்பொழுதெல்லாம் அவன் அவளையே பார்த்த வண்ணம் இருந்தான். ஆனால் மீரா அவனை ஒரு முறை கூட பார்க்கவே இல்லை. அவளது புத்தியை மழுங்கடித்துக் கொண்டிருந்த உணர்வுகளால் அவள் தடுமாறிக் கொண்டிருந்தாள். முகுந்தன் தன் மீது விழுந்த காட்சி அவளது மணக்கண்ணில் ஓடிக்கொண்டே இருந்தது. அப்படி ஓடிய போதெல்லாம் அவளது இதயத்துடிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதை இயல்பு நிலைக்கு கொண்டு வர அவள் எவ்வளவு முயன்ற போதும் அது அவளால் முடியவில்லை.

அழைப்பு மணியின் ஓசை கேட்ட மீரா, தன் எண்ணத்திலிருந்து வெளி வந்தாள். முகுந்தன் சோபாவை விட்டு எழுவதற்கு முன், விரைந்து ஓடிச் சென்று கதவை திறந்தாள். அழைப்பு மணியின் ஓசையால் முகுந்தன் சற்று குழம்பித்தான் போயிருந்தான். அவன் வீட்டிற்க்கு தான் யாருமே வர மாட்டார்களே...! கதவை திறந்து, அங்கு நின்றிருந்த பிள்ளைகளை பார்த்து புன்னகைத்தாள் மீரா. முகுந்தனோ கடுப்பானான்.

"அக்கா, பாருங்க இவ மறுபடியும் ஊஞ்சலுக்காக என் கூட சண்டை போடுறா. நீங்க சாயங்காலம் பார்க்குக்கு வரேன்னு சொல்லி இருந்தீங்கல்ல? நீங்க வரலையா?" என்றாள் பாயல்.

"ஷ்ஷ்... அவருக்கு உடம்பு சரியில்ல" என்றாள் மீரா மெல்லிய குரலில்.

"அவருன்னா யாரு?" என்றாள் பிங்கி.

"அவங்க ஹஸ்பண்ட்" என்றான் ரேஹான்.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now