57 செல்ல சண்டை

649 47 5
                                    

 57 செல்ல சண்டை

மீராவுடன் வீட்டுக்கு வந்தான் முகுந்தன். அப்பொழுது அவனுக்கு வாசுதேவனிடமிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று,

"ஹாய் வாசு" என்றான்.

"எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கோம். இன்னும் ரெண்டு நாள்ல நாங்க மும்பை வந்துடுவோம்."

"ஒன்னும் பிரச்சனை இல்ல. டேக் யுவர் டைம். நான் மிஸஸ் முகுந்தன் கிட்ட பேசலாமா?"

அதைக் கேட்டு சிரித்த முகுந்தன்,

"தாராளமா" என்று தன் கைபேசியை மீராவிடம் கொடுத்தான்

"எப்படி இருக்கீங்க மீரா?"

"நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?"

"ஃபென்டாஸ்டிக்... உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்க ஃபோன் பண்ணேன். நம்மளோட நெக்ஸ்ட் ப்ராஜெக்டை நீங்க படிச்சு பாத்தீங்கல்ல? உங்களுக்கு அதுல ஏதாவது ஞாபகம் இருக்கா?"

"நல்லா ஞாபகம் இருக்கே..."

"அந்த ஃபைலை நான் எங்க வச்சேன்னு ஞாபகம் இல்ல. உங்களுக்கு அந்த ஃபைலில் இருக்கிற விஷயங்கள் ஞாபகம் இருந்தா, எனக்கு அதை கொஞ்சம் எழுதி அனுப்ப முடியுமா?"

"நிச்சயமா எழுதி அனுப்புறேன்"

"தேங்க்ஸ் மீரா"

"நந்தா, ஜகா கேபினில் எதுக்கும் ஒரு தடவை செக் பண்ணி பாருங்களேன்"

"ஏற்கனவே எல்லாத்தையும் தலைகீழா புரட்டி போட்டுட்டோம்"

"ஓ... சரி, உங்களுக்கு நான் அனுப்புறேன்"

"தேங்க்ஸ் மீரா" என்று அழைப்பை துண்டித்தான் வாசுதேவன்.

"என்ன ஆச்சு?" என்றான் முகுந்தன்.

"மெஹரா கம்பெனி ஃபைலை, வாசு எங்கேயோ மறந்து வெச்சிட்டாரு போல இருக்கு. அவருக்கு அந்த டீடெயில்ஸ் வேணுமாம்"

"உனக்கு அந்த டீடெய்ல் ஞாபகம் இருக்கா?"

"நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து தானே அதை செய்யறதா இருந்தோம்? அதனால எல்லாத்தையும் நான் நல்லா தரோவா படிச்சு வச்சிருந்தேன்"

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now