39 உரையாடல்

867 63 9
                                    

39 உரையாடல்

திடீரென முகுந்தன் அணைத்ததும் ஒன்றும் புரியாமல் நின்ற மீரா, தன்னை சுதாகரித்துக் கொண்டு அவன் பிடியிலிருந்து வெளியேறினாள்.

"இது ஆஃபீஸ்" என்று அவனது அறையின் கண்ணாடி கதவின் வழியாக வெளியே பார்த்தபடி கூறினாள்.

"எனக்கு தெரியும். நான் உன்னை தப்பா புரிஞ்சுகிட்டதுக்கு என்னை மன்னிச்சிடு. நான் தப்பா யோசிச்சுக்கிட்டு இருக்கேன்னு எனக்கு தெரியல. இந்த மாதிரி, இந்த விஷயங்களுக்கு இன்னொரு பக்கம் இருக்கும்னு நான் நினைக்கல"

"இப்போ உங்களுக்கு என்ன புரிஞ்சது?" என்றாள்.

"நீ ஜெகதீஷ் பர்த்டே பார்ட்டிக்கு போகல... நீ வீடு தேடினதும் உனக்காக இல்ல" என்ற அவனை மெல்லிய புன்னகையோடு பார்த்துக் கொண்டு நின்றாள் மீரா.

"ஐ அம் சாரி... நான்..." என்று அவன் ஏதோ சொல்ல விழைய, அவன் அறையின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு பேசுவதை நிறுத்தினான்.

கதவை தட்டியது நந்தகோபால்.

"அசிஸ்டன்ட் மேனேஜர் உங்களை பார்க்க வந்திருக்காரு. நம்ம அப்புறம் பேசலாம்" என்றாள் மீரா.

சரி என்று அதிருப்தியுடன் தலையசைத்தான் முகுந்தன். அதை புரிந்து கொண்டு புன்னகை புரிந்தாள் மீரா.

"எல்லா பிரச்சனைக்கும் உடனே முடிவு கட்டிட முடியாது. அதோட மதிப்புக்கு தகுந்த மாதிரி, நம்ம காத்திருந்துதான் ஆகணும்" என்று கதவை நோக்கி நடந்த அவள், கதவை திறக்க முயல, அவன் கூறியதை கேட்டு அப்படியே நின்றாள்.

"அப்படின்னா நான் உனக்காக ரொம்ப நாள் காத்திருக்கணுமா?"

கதவின் கைப்பிடியை பிடித்துக் கொண்டு நின்ற மீரா, அவனை அதிசயமாய் பார்த்தாள்.

"உன்னை விட மதிப்பு வாய்ந்த விஷயம் எனக்கு வேற எதுவும் இல்ல" என்றான்.

அழகிய புன்னகையுடன் அவன் இடம் விட்டு சென்றாள் மீரா. நல்லவேளை அவளுக்கு அவன் மீது கோபமில்லை. அவளது புன்னகையே அதற்கு சான்று. தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை சரி கட்டி விட முடியும் என்ற நம்பிக்கையை அந்த புன்னகை அவனுக்கு வழங்கியது.

தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)Where stories live. Discover now